புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2013


கொழும்பு குறைந்தளவு செலவைக் கொண்ட நகரமாக தெரிவு.கடந்த வருடம் அதிக செலவு நகரங்களில் முதல் இடம் வகித்த சுவிஸின் சூரிச் நகரம், நாணயக் கொள்கை மாற்றம் காரணமாக 7ம் இடத்துக்கு சென்றுள்ளது.
இலங்கையின் கொழும்பு உலகில் குறைந்தளவு செலவுகளை கொண்ட நகரம் என்று தரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பாய், கராச்சி என்பனவும் இந்த நகர வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தின் காத்மண்டு மற்றும் அல்ஜீரியாவின் அல்ஜீயர்ஸ் என்பனவும் குறைந்தளவு செலவைக்கொண்ட நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் சிட்னி மெல்போன் என்பன அதிக செலவுகளை கொண்ட நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் 4 நகரங்கள், ஆசியாவின் 6 நகரங்கள், ஐரொப்பியாவின் 10 நகரங்கள் என்பன கூடிய செலவைக் கொண்ட நகரங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஜப்பானின் டோக்கியோ அதிக செலவை கொண்ட முதல் நகராக தெரிவாகியுள்ளது.
ஓசாகா இரண்டாவது அதிகூடிய செலவைக்கொண்ட நகராக கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடம் அதிக செலவு நகரங்களில் முதல் இடம் வகித்த சுவிஸின் சூரிச் நகரம், நாணயக் கொள்கை மாற்றம் காரணமாக 7ம் இடத்துக்கு சென்றுள்ளது.

ad

ad