புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2013


சென்னை மடிப்பாக்கம் : ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை
சென்னை மடிப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கார் டிரைவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


மடிப்பாக்கம் அருகே உள்ள உள்ளகரம் வெங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர் இங்கு தனியாக வசித்து வந்தார்.  முரளியின் பெற்றோரும், குடும்பத்தினர் பக்கத்து தெருவில் வசித்து வந்தனராம். முரளிக்கும், அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் முரளி தனியாக வசித்து வந்ததாக கூறப் படுகிறது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த முரளிக்கு, ஒரு பெண்ணுடன் தவறான உறவும் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முரளியின் வீட்டு வாசலில் செவ்வாய்க்கிழமை காலை ரத்தம் தேங்கி நின்றதாம்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர், மடிப் பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று பார்த்தனர்.
அப்போது முரளி தலையின் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீஸார், அவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முரளிக்கு, ரியல் எஸ்டேட் தொழிலில் அதேப் பகுதியைச் சேர்ந்த முனியப்பனுக்கும், முரளியின் கார் டிரைவர் மணிமாறனுக்கும்  இடையே தகராறு இருந்தது தெரியவந்தது. மேலும் முனியப்பனும், மணிமாறனும் இணைந்து முரளியை கொலை செய்திருப்பது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து, விசாரணை செய்தனர்.   

ad

ad