புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2013


க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9057 பேர் 3 பாடங்களில் “ஏ” சித்தி!
2012ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த 128, 809 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 8544 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய 207, 910 பேரில் 61.35 வீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 16,538 பேர் அனைத்துப் பாடங்களிலும் குறைந்த மதிப்பீட்டைப் பெற்று சித்தியடையத் தவறியுள்ளனர்.
அதேநேரம், பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய 25,724 மாணவர்களில் 15, 936 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 513 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். இவர்களில் 1947 பேர் அனைத்துப் பாடங்களிலும் குறைந்த புள்ளிகளை பெற்று சித்தியடையத் தவறியுள்ளனர்.
2012ம் ஆண்டு க. பொ. த உயர்தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் உயிரியல் விஞ்ஞானத் துறையில் 313 பேர் மூன்று பாங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றிருப்பதுடன், பெளதீக விஞ்ஞானத்தில் 443 பேரும், வர்த்தகத் துறையில் 6471 பேரும், கலைத்துறையில் 1313 பேருமாக 8544 பேர் அனைத்து மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
பழைய பாடத்தின் கீழ் உயிரியல் விஞ்ஞானத்துறையில் 72 பேரும், பெளதீக விஞ்ஞானத்துறையில் 47 பேரும், வர்த்தகத்துறையில் 234 பேரும், கலைத்துறையில் 160 பேரும் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

ad

ad