புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2013


புலிகளை அழிப்பதற்கு உதவிய இந்தியா இன்று இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறது


விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவிய இந்தியா இன்று இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகத் தெரிவித்த யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த
ஹத்துருசிங்க யாழ். பல்கலைக்கக வளாகத்தில் பரசூட்களில் இறங்கிய இந்திய அமைதிப் படையினரை புலிகள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றமை மனித உரிமை மீறலாகத் தெரியவில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.

1987 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பரசூட்டில் தரையிறங்கியபோது கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினரின் நினைவுத் தூபி பலாலி படைத்தளத்தில் அமைக்கப்பட்டு அங்கு இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேலும் கூறியதாவது;

புலிகளுக்கு இந்திய மத்திய அரசு உதவவில்லை. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பகுதியினர்தான் புலிகளுக்கு ஆயுத, பண உதவிகளை வழங்கி வளர்த்து விட்டனர். தமிழ் நாட்டிலுள்ள 20 க்கும் மேற்பட்ட முகாம்களில் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு ஒரு கூலிப் படையினராகவே இங்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறான நிலையில்தான் இலங்கை  இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு புலிகளிடம் ஆயுதகளைவும் இடம்பெற்றது. ஆனால்  அதன் பின்னர் புலிகள் இந்திய அமைதிப் படையுடன் ஆயுத மோதல்களில் ஈடுபட்டனர். புலிகளுக்கு இந்திய மத்திய அரசு ஆதரவு வழங்காத போதும் தமிழ் நாடு ஆதரவளித்தது.

இறுதியில் இலங்கையரசு புலிகளை அழிக்க இந்திய அரசு முழுமையாக உதவியது. இதனால் புலிகள் அழிக்கப்பட்டனர்.புலிகள் அழிக்கப்பட்டதனால் இந்தியாவுக்கு நன்மை ஏற்பட்டது. புலிகளை அழிக்க விரும்பிய இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசும் சர்வதேச நாடுகள் சிலவும் இன்று இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றன.

இலங்கைமீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவர வேண்டும் என சிலர் முயற்சிக்கின்றனர். பொருளாதாரத்தடை கொண்டு வரப்பட்டால் முழு நாட்டுக்கும்தான் பாதிப்பு. எமது பிரச்சினைக்கு நாமே தீர்வு காண வேண்டும். பிறர் தலையிட்டால் பிரச்சினைகள் அதிகரிக்கும் . நாமே எமது பிரச்சினைகள் தொடர்பான தீர்வுக்கான உடன்பாடுகளைக் காணவேண்டும். வடக்கு மக்கள் சமாதானமாகவே வாழ விரும்புகின்றனர். இதனை விரும்பாத சிலரே குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

சமாதானத்தை விரும்புவோருக்கும் சட்டம், ஒழுங்கை மதிப்பவர்களுக்கும் இந்த நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை. இதேவேளை எமக்குத் தேவையான காணிகளை நாம் சுவீகரிப்போம். அந்தக் காணிகளுக்கு தற்போதைய மதிப்பின்படி நஷ்டஈடுகளைவழங்கத் தயாராகவுள்ளோம்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் எவரும் சுட்டுக் கொல்லப்படவில்லை. 

அபிவிருத்திப் பணிகள் துரித வேகத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. 1983 க்கு முன்னர் வடக்கு மீன்பிடித்தொழிலில் இரண்டாம் இடத்தில் இருந்தது. தற்போது மீண்டும் அந்த இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. வடக்கு மக்கள் சமாதானமாக வாழ விரும்புகின்ற நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.

ad

ad