புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013





""ஹலோ தலைவரே... மதுரையில் அரசியல் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சென்னையிலும் அதே மாதிரி அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பு.. அதுவும் ஆளுங் கட்சிப் பிரமுகரைக் குறிவைத்து..''
nakeeran
""மதுரையிலே பொட்டு சுரேஷைப் போட்டுத் தள்ளிட்டாங்க. சென்னையிலே ஆளுங்கட்சி பிரமுகருக்கு குறியா? யாருப்பா அது?''

""மந்திரி வளர்மதிக்கு எதிரா ஒரு பகுதிச் செயலாளர் கொடுத்த புகார்தான் ஆளுந்தரப்பு வட்டாரத்திலேயே திகில் கலந்த டென்ஷனை உண்டாக்கிடிச்சி. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி அ.தி.மு.க செயலாளரா இருக்கிறவர் அப்துல்கரீம் என்கிற வி.கே.பாபு. இவரோட புகார் என்னன்னு விவரமா சொல்றேன் கேளுங்க தலைவரே.. பிப்ரவரி 1-ந் தேதியன்னைக்கு ராயப் பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கும் விழாவுக்கு அமைச்சர் வளர்மதி வந்தார். அந்த விழாவுக்கு பகுதிச் செயலாளர்களையும் வட்டச் செய லாளர்களையும் கூப்பிடலை. ஆனால், 116-வது வட்ட கவுன்சிலர் வி.எஸ்.வாசனை மட்டும் கூப்பிட்டு விழா நடத்தினாங்க. புறக்கணிக்கப் பட்ட ஆளுங்கட்சியினரான நாங்களெல்லாம் சேர்ந்து கார்டனில் உள்ள பூங்குன்றன் கிட்டேயும் தலைமைக்கழகத்தில் உள்ள மகாலிங்கத்துக்கிட்டேயும் புகார் கொடுத்தோம். மறுநாள் நைட்டு 12.30 மணிக்கு எனக்கு போன் வருது.''


""மிட்நைட்டில் போனா.. திகில் கூடுதே!''

""பாபுவோட கம்ப்ளைண்ட்டை முழுசா சொல்றேங்க தலைவரே… .. கவுன்சிலர் வாசனுக்கு நெருக்கமான ராஜேஷ்ங்கிறவர்தான் போன்  பண்ணினாரு. அமைச்சர்  மேலேயே கட்சி மேலிடத்துக்குப் புகார் சொல்றியா? அவங்க நம்ம கவுன்சிலரைக் கூப்பிட்டு, உன்னை உண்டு- இல்லைன்னு பண்ணச் சொல்லிட்டாங்க. உன் வீட்டுல பெட்ரோல் குண்டு வீசப்படும். அதில் உன் கார் தீப்பிடிச்சி எரியும். அப்ப நீ வெளியே வரும்போது, கூலிப்படையை வச்சி உன்னைப் போட்டுத் தள்ள முடிவு பண்ணியாச்சுன்னு ராஜேஷ் மிரட்டினாருங்கிறதுதான் பாபுவோட கம்ப்ளைண்ட். தனக்கு வந்த மிரட்டலை மா.செ. கலைராஜன்கிட்டே பாபு சொல்ல, அவர் மூலமா சிட்டி கமிஷனர் கவனத்துக்கு இதுபோய், கமிஷனர் அட்வைஸ்படிதான் ராயப் பேட்டை ஸ்டே ஷனில் புகார் கொடுக்கப்பட்டிருக்கு.'' 

""என்ன நடவடிக்கையாம்?''

""அப்துல்கரீம் என்கிற பாபுவை கவனமா இருக்கும்படி போலீஸ் சொல்லியிருக்கு. அதே நேரத்தில், வளர்மதி தரப்பிலிருந்து போலீசுக்கு பிரஷராம். வாசன் மேலேயும் ராஜேஷ் மேலேயும் நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு ஓவர் பிரஷர். ராஜேஷ் இப்ப எஸ்கேப். உண்டு-இல்லைன்னு பண்ணிடுவோம்னு  பெண் மந்திரி  தரப்பிலிருந்து மிரட்டல் வந்ததோடு, மிரட்டுன ஆட்களையும் மந்திரி தரப்பே காப்பாற்றுவதால, மதுரை மாதிரி சென்னையிலும் ஏதாவது விபரீதம் நடக்குமோங்கிற பயம் ஆளுங்கட்சியினர் மத்தியிலும்  போலீஸ் வட்டாரத்திலும் இருக்குது.''

""தமிழ்நாடு டெரர் மாநிலமா மாறிக் கிட்டிருக்கு.''…

""அதனால பெங்களூரு பக்கம் போவோம்ங்க தலைவரே.. 4-ந் தேதியன்னைக்கு சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைங்கிறதால அதற்குள்ளே அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படுவாரா மாட் டாரான்னு எதிர்பார்ப்பு இருந்தது. கர்நாடக உள்துறை மந்திரி அசோக் வீட்டுக்கு, இங்குள்ளவர்களிடம் அடிக்கடி தொடர்பில் இருந்தபடி பெங்களூரிலேயே தங்கியிருக்கும் வக்கீல் ஒருத்தர் அடிக்கடி நடையா நடந்தாரு. அசோக்கும் நல்ல முடிவு சொல்லு வாருன்னுதான் எதிர்பார்ப்பு இருந்தது.'' 

""ஆச்சார்யாவின் ஜூனியரான சந்தேஷ் சவுடா வையே நியமிப்பாங்கன்னு எதிர்பார்க்கப்பட்டதே..!''

""அவர் வந்துவிடக் கூடாதுன்னு இங்குள்ளவங்க நினைச்சாங்க. கர்நாடக உள்துறை மந்திரியும், அவ ருக்கு 18 வருட அனுபவம்தான் இருக்குன்னு சொல்லி சவுடாவை நியமிப்பதற்கு எதிர்ப்புக் காட்டியிருக்காரு. ஆனா, கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி பொறுப்பில் இருக்கிற ஸ்ரீதர் ராவ்வும், கர்நாடக  ரிஜிஸ்ட்ரார் ஜென ரலா இருக்கிற கிருஷ்ண பட்டும் கிரிமினல் வழக்குகளில் 38 வருட அனுபவம் கொண்ட பவானிசிங்கை அரசு சிறப்பு வழக்கறிஞரா பரிந் துரைக்க, அவரே நியமிக்கப்பட் டிருக்கிறார். அவருக்கு அசிஸ்ட் செய்ய சந் தேஷ் சவுடா வையும் நிய மிச்சிட்டாங்க.'' 

""அவருக்குத் தான் வழக்கு பற்றிய விவரங்கள் நன்றாகத் தெரியுமே!''

""சந்தேஷ் சவுடாவுக்கு மட்டு மில்லை.. ரிஜிஸ்ட் ரார் ஜெனரல் கிருஷ்ணபட்டுக்கும் நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருக்கு கேஸ் மாற்றப் பட்டபோது, ஆவணங் களையெல்லாம் சரிபார்ப் பதற்கும் மொழிபெயர்ப்பு வசதிகள் செய்வதற்கும் அமைக்கப்பட்ட குழுவில் கிருஷ்ணபட்டும் இப்ப நீதிபதியா இருக்கிற பாலகிருஷ்ணனும் இருந்தாங்க. அதனால் இரண்டு பேருக்குமே நன்றாகத் தெரியும். அதேபோல் வழக்கு விவரங்களை நன்கறிந்தவர் சந்தேஷ் சவுடா. அவர் தன்னோட குருநாதரான ஆச்சார்யாகிட்டே போய், நான் போய் அசிஸ்ட் பண்ணத் தயக்கமா இருக்குன்னு சொல்ல, நீ இந்த வழக்கில் அசிஸ்ட் பண்ணணும்னு ஆச்சார்யா சொல்லியிருக்காராம். எதிர்பார்த்த மாதிரி வக்கீல் நியமனம் நடக்கலையேங்கிற வருத்தம் இங்குள்ளவங்ககிட்டே இருக்குதாம்.''

""நிறைய முயற்சிகள் நடந்ததே.. எதிர்பார்ப்பு நிறை வேறலைன்னா வருத்தமாத்தான் இருக்கும்..'' 

""தலைவரே.. தமிழ்நாட்டில் டாஸ்மாக் தவிர மற்ற தனியார் பார்கள் இருக்குதே.. அங்கெல்லாம் விரைவில் சரக்கு விலை ஏறப்போகுது. மார்ச் மாதமானால் இந்த பார்களுக்கான லைசென்ஸை ரினீவல் பண்ணணும். இதற்காக ஜனவரி மாதத்திலேயே சம்பந்தப்பட்ட துறையின் கமிஷனர் மாலிக் பெரோஸ்கான் ஒரு மீட்டிங் போட்டிருக்காரு. ஜாயிண்ட் கமிஷனர் டூ அந்தஸ்தில் இருக்கும் கலைச்செல்வியைக் கூப்பிட்டு பார் ஓனர்கள்கிட்டே பேசச் சொல்லியிருக்கிறார். கலைச்செல்வியோ, ரினீவல் சம்பந்தமா மினிஸ்டர் நத்தம் விஸ்வநாதனைப் பார்த்திடுங்கன்னு சொன்னாராம். பார் ஓனர்களுக்கு ஒன்றும் புரியலை. லைசென்ஸ் புதுசா வாங்குறதுக்குத்தான் பலரையும் பலவிதத்தில் பார்க்க வேண்டியிருக்கும். ரினீவலுக்குமான்னு யோசிச்சிருக்காங்க.''

""மறுபடியும் முதல்லேயிருந்தா?''

""அப்படித்தான் அவங்களும் மிரண்டு போயிருக்காங்க. 5 எல்-லில் ஆரம்பிச்சிருக்கு. மிரண்டு போயி, இதற்கெல்லாமா கட்டிங் தரணும்.. புதுசு புதுசா கிளப்புறாய்ங்களேன்னு கதறியும் மசியலையாம். கடைசியா, 50 ஆயிர மாவது கொடுத் தால்தான் ரினீவல்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லப் பட, தமிழகத்தில் உள்ள 3000 தனியார் பார்களின் லைசென்ஸ் ரினீவலுக் கும் தலா 50ஆயிரம் வசூல் பண்ண முடிவாகியிருக்கு. அங்கே கொடுக்கிற காசை, குடிமகன்கள்கிட்டேதானே வசூல் பண்ணியாகணும். அதனால சரக்கு விலை உயர்ந்திடுமாம்.''

""சுண்டல், கடலை, சிப்ஸ் இதெல்லாமும் கட் ஆயிடும்.''…

""அரசியல் களத்துக்கு வர்றேங்க தலைவரே.. … தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வரும் எம்.பி. தேர்தலில் அமையாதுன் னும், தே.மு.தி.க.வோடு காங்கிரஸ் கூட்டணி அமைக்க கட்சியின் புது துணைத்தலைவரும் எம்.பி. தேர் தலில் கட்சியை வழிநடத்தப் போறவருமான ராகுல் வியூகம் வகுத்திருப்பதா செய்திகள் வந்துக் கிட்டிருக்கு.. என்னதான் நடக்குதுன்னு கதர்ச்சட்டை வட்டாரங்களில் விசாரிச்சேங்க தலைவரே.. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அதிகம் பேசாதவர். ஆனா, மேலிடத்து மூவ் என்னன்னு நல்லா தெரிஞ்சவர்.''

""போன 2-ந்  தேதி நாமக்  கல்லில் நடந்த ஒரு திருமண விழாவில் வாசன் பேசும்போது, பழைய கூட்டணி தொடரும். ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமையும். புதிய கட்சிகளும் கூட்டணியில் சேரும். வெற்றி நிச்சயம்னு சொல்லியிருக்காரே..'' 

""அதைத்தான் விவரமறிந்த கதர்ச்சட்டையினரும் சொல்றாங்க. பழைய கூட்டணியான தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடரும் னும், அதோடு தே.மு.தி.க.வும் சேரும்ங்கிறதைத்தான் மேலிட மனதறிந்து வாசன் சொன்னாராம். அதே மாதிரி, இந்த மூவ் தெரிந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். வழக்கமா தி.மு.க எதிர்ப்பையே பிரதானமாக வைத்திருக்கும் இளங்கோவன் மேலே, இப்ப ஜெ.வை அவமதித்ததாக அவதூறு வழக்குப் போடப்பட்டிருக்கு. அதைப் பற்றி கருத்து சொல்றப்ப, "நான் என்ன 2000 செருப்பு வச்சிக்கிட்டு, வருமானத்தை மீறி சொத்து வாங்கிட்டு கோர்ட்டுக்கு அலைஞ்சிக்கிட்டா இருக்கேன். பொதுமக்கள் பிரச்சினைக்காகப் பேசு வதற்காக வழக்கு போட்டால் சந்திக்கத் தயார்'னு மாநில ஆளுந்தரப்புக்கு எதிரா பேட்டி கொடுத்திருப்பதும், இப்போ துள்ள மூவ்களை வைத்துதானாம்.'' 

""காங்கிரஸ் லீடர்கள் பற்றி நீ சொன் னதும், புதுச்சேரி காங்கிரசின் சீனியர் லீடரான ப.சண்முகம் மரணச் செய்தி தாம்ப்பா ஞாபகத்துக்கு வருது. காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ், சோனியான்னு சீனியர் லீடர்களோடு பழகியவர். காம ராஜர் மாதிரியே திருமணம் ஆகாத காங் கிரஸ் தலைவர். இரண்டு  முறை புதுவை முதல்வராகவும் மூன்று முறை எம்.பி.யாக வும் இருந்தவர். இப்போதைய முதல்வர் ரங்கசாமிக்கு ஆதரவாக இருந்து ஆலோ சனைகள் சொன்னவர். ரொம்ப எளிமை யானவர். தன்னோட உடலுக்கு என்ன  பிரச்சினைன்னாலும் அரசு மருத்துவ மனைக்குத்தான் போவாரு.''

""நானும் கேள்விப்பட்டேங்க தலை வரே... பிப்ரவரி 1-ந் தேதி காரைக்காலில் உள்ள வீட்டில் நைட்டு 12.15 மணி வரைக்கும் நண்பர்கள்கிட்டே பேசிக் கிட்டிருந்திருக்காரு. 2-ந் தேதி காலையில் வாக்கிங் போய்விட்டு தன் வளர்ப்பு நாய்களோடு விளையாடிட்டு , மாடிப்படி ஏறும்போது தடுமாறி விழுந்ததில் தலையின் பின்பகுதியில் அடிபட்டு காயமாக, உடனே காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில்தான் அட்மிட் பண்ணி னாங்க. அவரைப் பார்க்க அமைச்சர் சந்திரகாசு வந்தப்ப, சண்முகத் தோட தலையில் கை வைத்துப் பார்த்திருக்காரு. அப்ப சண்முகம், "தலையில் கை வைக்காதீங்க. தலை நோகுது'ன்னு சொல்லியிருக்காரு. அதுதான் அவர் பேசுன கடைசி வார்த்தை. உயிர் பிரிஞ்சிடிச்சி. அரசு மரியாதையோடு அவரோட உடல் அடக்கம் செய்யப் பட்டதோடு, மூன்று நாள் அரசு முறை துக்கமும் கடைப்பிடிக்கப் படுது. இறந்துபோன சண்முகத்துக்கு வயது 86. மார்ச் 25 அன்னைக்கு அவரோட 87-வது பிறந்தநாளுக்காக ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ்தலைவர் சோனியா உள்ளிட்டவங்களோடு வாழ்த்து செய்தியோடு சிறப்பு மலர் ரெடியாகிக்கிட்டிருந்திருக்கு அதற்குள் அவர் இறந்துட்டாரு. அவருக்குன்னு இருந்த சொத்துன்னா நன்றியுள்ள நான்குகால் ஜீவன்களும், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் அன்பும்தான்.''

""இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட அதிசய அரசியல்வாதிகள்…!''

""ஆனா ஆட்சியதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றிடணும்னு துடிக்கிற அரசியல்வாதி கள்தான் அதிகமா இருக்காங்க. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரா தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் நரேந்திர மோடி ரொம்ப மும்முரமா இருக்காரு. ஏற்கனவே அவருக்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பின் சப்போர்ட் இருக்கு. கட்சியிலும் ஆதரவு இருக்கு. பா.ஜ.க.வின் புதிய தலைவர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து ஆதரவு திரட்டியிருக்கும் மோடி, கும்பமேளாவுக்கு வந்திருக்கும் சாமியார்கள் மூலமாகவும் ஆதரவுக் குரல் கொடுக்க வச்சிருக்காரு.''

""மோடியின் மூவ் பற்றி இன் னொரு  தகவலை நான் சொல் றேன்.. பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களிலும் மோடி  தனிப்பட்ட முறையில் சர்வே எடுத்து வருகிறார். குஜராத்தில் தனக்கு துல்லியமா சர்வே எடுத் துக் கொடுத்த நிறுவனம் மூல மாகத்தான் இந்த சர்வே எடுக்கப் படுது. இதில், தமிழ்நாடும் அடக் கம். இங்கே பா.ஜ.க.வுக்கு தனிப் பட்ட செல்வாக்கு இல்லைன் னாலும், மோடி பிரதமராக யூத் ஏரியாவில் ஆதரவு இருப்பதா சர்வேயில் தெரியவந்திருக்காம்.''

 லாஸ்ட் புல்லட்!

அறிஞர் அண்ணாவின் 44-வது நினைவுநாளையொட்டி பிப்ரவரி 3-ந் தேதியன்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இத்தனை ஆண்டு களில் ஓராண்டுகூட தவறாமல் பேரணியில் கலந்துகொள்ளும் கலைஞர், இந்த முறையும் கலந்துகொண்டார். திரண்டு வந்திருந்த தொண்டர்கள், தலைவர் முகம் ரொம்ப டல்லாக இருக்கிறது என்று பேசிக்கொண்டனர்.

விஸ்வரூபம் தொடர்பாக கோட்டை யில் பேட்டி கொடுத்த ஜெ., தனக்கும் ஜெயா டி.வி.க்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சொன்னார். ஜெயா டி.வியின் எம்.டி பிரபா சிவக்குமாரின் முகவரியும் ஜெ.வின் இல்ல முகவரியும் 36, போயஸ் கார்டன் என்றே பதிவாகியிருப்பதை கண்டறிந்து வெளியிட்டிருக்கிறது முரசொலி. 

வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட பலரின் நீண்டகாலப் போராட்டத்தினால் சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் உரு வாக்கப்பட்டது. இதனை அப்போதிருந்தே பொறுத்துக்கொள்ள முடியாமல் இருந்த னர் கேரள மாநிலத்தின் ரயில்வே அதிகாரி களும் அரசியல்வாதிகளும். இந்த கோட் டத்தை கேரளாவுக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்படுவதால் அதை எதிர்த்து திராவிடர் கழகம் உள்பட பல அமைப்பு களும் களம் காணத் தயாராகி வருகின்றன.  

டெசோ அமைப்பின் கூட்டம் பிப்ரவரி 4-ந் தேதி அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில்  நடந்தது. கி.வீரமணி, திருமாவளவன், சுப.வீ உள்ளிட்டோர் கலந்துகொண்ட இக் கூட்டத்தில், இலங்கை அதிபர் ராஜ பக்சேவின் இந்திய வருகையைக் கண்டிக் கும் விதத்தில் வரும் 8-ந் தேதி சென்னையில் கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, மார்ச் மாதத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் டெசோ கருத்தரங்கத்தை டெல்லியில் நடத்துவது, ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமைக்காக ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசை வலியுறுத்து வது, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலைக் கண்டித்து 18-ந்தேதி ராமேஸ்வரத்திலும் 19-ந்தேதி நாகப்பட்டினத் திலும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலை மாணவர்களின் விடுதலை, கதி என்னவென்று தெரியாத விடுதலைப்புலி  அமைப்பினரின் நிலை இவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ம.தி.மு.க பொதுக்குழு தாயகத்தில் 4-ந் தேதி நடந்தபோது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் இதர கட்சிகளுடனான கூட்டணி வாய்ப்புகள் பற்றியும் ம.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கருத்துகளைத் தெரிவித்தனர். அப்போது வைகோ, கூட்டணி பற்றி நான் முடிவு செய்துகொள்கிறேன் என்றார். பொதுக்குழு முடிந்து பேட்டியளித்தபோது, மத்தியில் உள்ள காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசை விமர்சித்ததுடன், காவிரி விவசாயிகள் பிரச்சினைக்காக ஜெ. அரசைப் பற்றியும் விமர்சித்தார் வைகோ.

ad

ad