புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013


ஜெயலலிதா எப்படி கனவு கண்டாலும் பிரதமர் நற்காலி பக்கத்தில் கூட
போக முடியாது : ஈ.வி.கே.எஸ். - இல. கணேசன் கடும் தாக்கு

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 



காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளை குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் ஆட்சி அமைக்க முடியாது' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் தமிழகத்திற்கு காவிரி நீர் பெற்ற தருவது குறித்து பல முறை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக முதல்வர் தான், ஒரு முறை கூட இந்த பிரச்சனை குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தவில்லை என்று இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
மேலும், காவிரி பிரச்சனை தொடர்பாக, ஜெயலலிதா இதுவரை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசிடம் ஜெயலலிதா தொடர்ந்து மோதல் போக்கை கையாளுவதாகவும், தன்னை தமிழக வீராங்கனை போல் காட்டிக் கொள்வதாகவும் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

காவிரி நீர் பிரச்சனையில் மிக பெரிய தடையாக இருப்பது ஜெயலலிதா மட்டும் தான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு தமிழக நலனில் ஜெயலலிதா அக்கறை காட்டும் வேண்டும் என்று கூறிய அவர், காங்கிரஸ் நினைத்தால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதா எப்படி கனவு கண்டாலும் பிரதமர் நற்காலி பக்கத்தில் கூட போக முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த கருத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனையில் தேசிய கட்சிகளை குற்றம் சொல்லும் ஜெயலலிதாவின் கர்நாடகாவில் உள்ள அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் அம்மாநில அரசுக்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தேசிய கட்சி வராது என்று கூறிய ஜெயலலிதா பல்லாண்டு வாழ வேண்டும் என்று கூறிய அவர், அப்போது தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை அவரால் பார்க்க முடியும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

ad

ad