புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2013

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய வருகையை எதிர்த்து மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி வரை போய் மதிமுக வைகோ தலைமையில் போராட்டம் நடத்தியது. 
கடந்த வருடம் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் வைகோவின் ஈழ அரசியலில் மைல் கல் என்று தமிழ் உணர்வாளர்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள். ஆனால், டெல்லியில் ராஜபக்ஷே
வருகைக்கு கறுப்புக்கொடி காட்டியதை பிரமிப்பாக பார்க்கிறார்கள் அதே ஈழ உணர்வாளர்கள். வைகோ இந்த முறை இராஜபக்ஷேவுக்கு கறுப்புக்கொடி காட்ட தேர்ந்தெடுத்த இடங்கள் திருப்பதி மற்றும் டெல்லி. இதுவரை திருமலையில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியிருந்தாலும் யாரும் அங்கே யாருக்கு எதிராகவும் கறுப்புக் கொடி காட்டியதில்லை. முதல்முறையாக இராஜபக்ஷேவுக்கு திருமலையில் மதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டினார்கள். கறுப்புக்கொடி போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டதுமே "அவங்க அவங்க வேலையை செய்யறாங்க இந்தியா ஜனநாயக நாடு அங்கே போய்வர எனக்கு முழு உரிமை உண்டு" என்று ராஜபக்ஷே தன்னுடன் இலங்கையிலிருந்து வந்திருந்த மீடியாக்ளிடம் சொன்னார். ஆனால் திருமலையில் தனக்கு கறுப்புக்கொடி காட்டுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ராஜபக்ஷே தமிழர்களுக்கு எவ்வளவு விரோதியோ அதே அளவுக்கு பக்தி மார்க்கத்தில் அவர் ஒரு தீவிரவாதி. இந்து கோயில்களுக்கு பறந்து பறந்து போவார். குறிப்பாக திருப்பதி வெங்கடாஜலபதி மீது இராஜபக்ஷேவுக்கு அலாதி பக்தி. தனது ஜனாதிபதி மாளிகையில் திருப்பதி பெருமாள் படத்தை அவர் மாட்டும் அளவுக்கு பக்தர்.

இதையெல்லாம் தெரிந்து வைத்துதான் மதிமுகவினர் சூடாக திருமலையில் கறுப்புக்கொடி ஏந்தினார்கள். முதலில் வைகோ தலைமையில் திருமலையில் மதிமுகவினர் திரளத்தான் திட்டம். அதே திட்டம் கடைசி நேரத்தில் மாறியது. டெல்லியில் வைகோ கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது முடிவானது. கிட்டத்தட்ட வைகோ திருமலைக்கு வரமாட்டார் என்ற தகவல் கிடைத்ததும்தான் ராஜபக்ஷே பீகாரிலிருந்து திருமலை வந்தார். இதுவரை அவ்வளவாக திருப்பதியில் போடப்படாத 144 தடையுத்தரவு ராஜபக்ஷே வருகைக்காக போட்டப்பட்டது. இதுவே மதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள் வைகோவின் தம்பிகள்.

டெல்லியில் பலமுறை ஈழ விவகாரம் தொடர்பாக பேச பிரதமர் மன்மோகன்சிங்கை வைகோ சந்தித்திருக்கிறார். ஈழ விவகாரம் பற்றித்தான் வைகோ பேச வருகிறார் என்று தெரிந்திருந்தும் மன்மோகன்சிங் மறுக்காமல் வைகோவிற்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுப்பார். ஆனால் அதே மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கு இம்முறை தலைமையேற்றார் வைகோ. டெல்லி போலீசும் மதிமுகவினரை எதுவும் செய்யாமல் போராட்டத்திற்கு அனுமதியளித்தது. ஆனால் ராஜபக்ஷேவின் கொடும்பாவியை கொளுத்தாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்தது. ஆனால் போராட்ட ஸ்பாட்டிலேயே கூட்டத்திற்கு நடுவில் இரண்டு ராஜபக்ஷே கொடும்பாவிகளை தயார் செய்து பார்லிமெண்ட்டுக்கு பக்கத்திலேயே கொளுத்தினார்கள் மதிமுகவினர்.

இதுபற்றி பேசிய மதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் தலைவர் வைகோ தனது டெல்லியில் கவர நினைத்தது இளைஞர்களைத்தான். அதனால்தான் அப்போராட்டத்தில் அவர் முதலில் ஈழப்பிரச்சனையைப் பற்றிப் பேசாமல் இலங்கையில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட கொடூரத்தைப் பற்றிப் பேசினார். டெல்லியில் மருத்துவமாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் இந்தியாவே திரண்டு நின்றதைப் போல ஈழத்தில் இசைப்பிரியா போன்ற இளம்பெண்கள் சிங்கள ராணுவ வீரர்களால் வேட்டையாடப்பட்டதற்கு இந்தியா ஏன் கண்டபம் தெரிவிக்கவில்லை என்று வைகோ பேசியபோது டெல்லிமாணவர்கள் உன்னிப்பாக கேட்டார்கள். படிப்படியாக இளைஞர் பட்டாளம் எங்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தபோது எங்களை கைது செய்வதாக டெல்லி போலீஸ் அறிவித்தது. பார்லிமெண்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்ட்டார். அதே காவல்நிலையத்தில்தான் பகத்சிங்கும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad