புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013


சிறிலங்கா அரசுக்கு எதிரான பொருளாதரத் தடை: இந்திய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அண்மையில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசுக்கு எதிராக பொருளாதரத் தடையைக் கோரும் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசாங்கம் பின்பற்ற வேண்டும் எனவும் நா.தமிழீழ அரசாங்கம் கேட்டுள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்திய அரசும் உலக நாடுகளும் ஐநா மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பிரேரணை ஒன்றைக் கொண்டுவர வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதனை நா.தமிழீழ அரசாங்கமும் வலியுறுத்துவதோடு, உலக நாடுகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி நிற்கின்றது.
நா.தமிழீழ அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் நிமல் விநாயகமூர்த்தி, செல்வி ஜெயலலிதா மீண்டும் முன் வைத்துள்ள இந்தக் கோரிக்கையை தாமும் வரவேற்பதாக தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்.
"சிறிலங்கா அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக சட்ட மன்றில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழக முதல்வர் மீண்டும் ஒரு முறை அந்த நிலைப்பாட்டை வலியுறுத்தி இருப்பது பாராட்டுக்கு உரியது.
இந்திய அரசாங்கம் தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன், மனித உரிமைப் பேரவை உள்ளடங்கலாக உலக நாடுகளும் இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும்" எனவும் அமைச்சர் தனது இவ்விவகாரம் குறித்து தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு எதிரான தடைகளை ஐநா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரல் வேண்டும் என நா.தமிழீழ அரசாங்கம் ஏற்கனவே விடுத்துள்ள வேண்டுகோளை மீண்டும் அமைச்சர் அவர்கள் வலியுறுத்தி நிற்கின்றார்.
அதுமட்டுமன்றி, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் ஆலோசனைப் படி போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றோடு, தொடர்ச்சியாக நடந்துவரும் இனஅழிப்புப் பற்றியும் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்ட சபையில் 2011ம் ஆண்டு ஆனித் திங்களில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்காக இந்திய அரசாங்கம் மற்றைய நாடுகளுடன் இணைந்து செயல்படும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. அத்துடன் இன அழிப்பில் ஈடுபட்டவர்களைப் போர்க் குற்றவாளிகளாகப் பிரகடனப் படுத்தல் வேண்டும் எனவும் கோரப்பட்டது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் யாவரும் மீளக் குடியேற்றப்பட்டு. சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் தன்மானத்தோடும் நல்ல நிலையில் வாழக் கூடிய யாப்பு அடிப்படையிலான பாதுகாப்பு நிலைமை ஏற்படும் வரை இந்த நிலைப்பாடு தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் அரசுத் தலைவர் தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமையை மறுப்பது மட்டுமன்றிஇ இனஅழிப்பு, போர்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவை தொடர்பான பொறுப்புக் கூறுதல் என்ற நிலைப்பாட்டையும் தேவை அற்றது என மறுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு பிரதேசத்தினை தமிழ் தாயகம் எனும் கோட்பாட்டை இல்லாது ஒழிக்கும் நோக்குடன் தொடர்ந்து இடம் பெற்று வரும் திட்டமிட்ட தொடர்ச்சியான இனஅழிப்பை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நிமால் வினாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், சட்ட முறையிலான ஆட்சி முறையில் ஏற்படுள்ள பின்னடைவு, சனநாயக விழுமியங்களில் ஏற்படுள்ள சீரழிவு. விசாரணையின்றி தடுத்து வைத்தலும் சித்திரவதை செய்தலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தலும் காணமல்போதலும், தமிழ்ப் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் ஆகியனவற்றினை, இந்த வேளையில் நா. தமிழீழ அரசாங்க அரசின் சார்பில் கண்டிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"கடத்தல்களும் கொலைகளும் இலங்கையில் தொடர்ந்து  இடம் பெறுகின்றன. யுத்த காலத்தில் இடம் பெற்றவை பற்றிய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை." எனும் ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையினை அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்துலக சமூகம் இனியும் பின்நிற்காது குற்றவியல், குற்றத் தடயவியல் துறைகளில் சிறந்த உலக மட்டத்தில் உள்ள நிபுணர்களை யுத்த  காலத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்தி தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலைப்பாட்டை அகற்ற வேண்டும் எனவும் அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், அனைத்துலக மட்டத்திலான சுதந்திரமான விசாரணை உலக சமூகம் ஆரம்பிக்க வேண்டும். உண்மையைக் கண்டறியும் காலம் வந்து விட்டது. எனவே, இந்திய நாடும் ஐநாவும் உறுதியாகச் செயற்பட வேண்டும் என அமைச்சர் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றார்.

ad

ad