புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2013


இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க கோரி புதுவையில் இன்று சீமான் உண்ணாவிரதம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வருகிற 27-ந் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் புதுவையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கு புதுவை பொலிஸார் அனுமதி மறுத்தனர்.

இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வேண்டி நாம் தமிழர் கட்சியினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 4-ந் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சியினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள சீமான் நேற்று இரவு புதுவை வந்தார்.
இன்று காலை அவரது தலைமையில் புதுவை சுதேசிமில் அருகே நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் புதுவை மாநில தலைவர் முகமது ரபீக், பொறுப்பாளர் அருமைதாஸ் மற்றும் நிர்வாகிகள் கௌரி, வத்சலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ad

ad