புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013


 தமிழ் வளர்ச்சித் துறைக்கான இணையதளம் 
தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட www.tamilvalarchithurai.org என்ற புதிய வலைதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.


தமிழக முதல்வர் தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி வலைதளம் இல்லாத குறையினைப் போக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கென புதிய வலைதளம் உருவாக்கிட ஆணையிட்டிருந்தார்.அதன் அடிப்படையில் 2012-2013ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறைக்கென 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனியாக ஒரு வலைதளம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட புதிய வலைதளத்தை தமிழக முதல்வர் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். 

இந்த வலைதளத்தில், தமிழ் வளர்ச்சித் துறையால் மேற்கொள் ளப்பட்டு வரும் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கப் பணிகள், தமிழ் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் விவரம், ஆட்சிச் சொல்லகராதி, தமிழ் வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் அவற்றைப் பெற்ற தமிழறிஞர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளன. 
மேலும், தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான பரிசு, நூல் வெளியிட நிதியுதவி, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, தமிழறிஞர்களுக்கு நிதி உதவி போன்ற திட்டங்களுக்கான விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இந்த வலை தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ad

ad