புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2013



இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்
 

தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளன
ர்.n<keeran

இந்த உண்ணாநிலை போராட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது, இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உலகமே நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தமிழ் ஈழத்தில் தமிழின படுகொலை நடந்துள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. 
தற்போது 12 வயதான சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை ராணுவம். இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச சமூகமும், ஐ.நா. மன்றமும் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளது. 4 வருடங்களுக்கு பிறகு இன்றும் ஐ.நா. மன்றமும், சர்வதேச சமூகமும் இந்த இனப்படுகொலையை மூடி மறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மட்டுமே ஈழ மக்களுக்கு ஒரே தீர்வு ஆகும்.
இப்போது எங்களது கோரிக்கைகள் என்னவென்றால், இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்க்குற்றமோ, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல. அது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
சர்வதேச விசாரணையும், பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு இதற்கான தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்து கொண்டு வர வேண்டும். சிங்கள இனவெறி அரசின் துணை தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்தியா இலங்கை அரசுடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.
இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும். 
ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரணை குழுவில் இடம்பெறக்கூடாது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு உடனடியாக தீர்வு காணாவிட்டால் தமிழகத்தில் இருந்து எந்த வரியையும் செலுத்த மாட்டோம். இதற்கான பிரச்சாரத்தில் மாணவர்களாகிய நாங்கள் தீவிரமாக ஈடுபடுவோம் என்றனர். 
படங்கள்: அசோக். 

ad

ad