புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013


எனது ஆட்சியில் ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை : சந்திரிக்கா

என்னுடைய ஆட்சி காலத்தில் இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,
எமது நாட்டில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் இரண்டாயிரம் பேர் அதிகாரத்தில் இருக்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆக குறைந்த கல்வி தமைமையுடையவர்களாவர். இந்நிலையில் எமது நாடு எவ்வாறு வளர்ச்சி அடையும்.

எனது ஆட்சி காலத்தில் எனக்கு உரிமை இல்லாத ஐந்து சதத்தை கூட நான் எடுத்தது கிடையாது. மேலும் எனக்கு வாக்களித்தவர்களுக்கு விருந்தளிக்கவும் இல்லை. எனது தந்தை அரசியலுக்காக நான்காயிரம் ஏக்கர் காணியில் 500 ஏக்கர் காணியை விற்றார். இதேவேளை அரசியலுக்காக எமது வீட்டையும் அடகு வைத்தோம்.

இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை. ஒரு வாகனத்தையே எமது பிள்ளைகளுக்கு பயன்படுத்த ஒதுக்கியிருந்தோம். இவ்வாறான வீண்விரயங்களை குறைத்து ஆட்சி புரிந்தமையாலேயே 150 கோடி ரூபாவிற்கு ஒரு கிபீர் விமானம் வீதம் எம்மால் யுத்தத்திற்கு செலவிட முடிந்து. எனவேதான் யுத்தத்தையும் வெற்றிகொள்ள முடிந்தது
.

ad

ad