புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013


உலகம் முழுவதும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான புதிய பாப்பாண்டவராக ஜார்ஜ் மரியோ பொர்கோகிலியோ தேர்வு செய்யப்பட்டார்.
இவர் அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர். இந்த அறிவிப்பையடுத்து வாடிகன் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பார்பாண்டவர் 16ம் பெனடிக்ட் கடந்த மாதம் 28ந்தேதி பதவி விலகினார். இதைத்தொடர்ந்து புதிய பாப்பாண்டவரை தேர்ந்தெடுப்பதற்காக வாக்குரிமை பெற்ற உலகம் எங்கும் உள்ள 115 கர்தினால்கள் வாடிகன் வந்து குவிந்தனர். இந்தியா சார்பில் 5 கர்தினால்கள் வாடிகன் சென்றனர். புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் நேற்று முன்தினம் மதியம் தொடங்கியது. நேற்று அதிகாலையில் முதல் வாக்கெடுப்பு தொடங்கியது.
இலங்கை – இந்திய நேரப்படி நள்ளிரவில் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்பதை அறிவிக்கும் வகையில் வெண்புகை வெளியேற்றப்பட்டது. இதைப் பார்த்து புதிய போப் தேர்வை காண வந்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். புதிய போப்பை காண பால்கனியை பார்த்தபடி ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
போப் ஆண்டவராக தேர்வு பெற மொத்தம் 115 ஓட்டில் 3ல் இரண்டு பங்கான 77 ஒட்டுகள் பெற வேண்டும். அதன் படி அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோகிலியோ புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை பாதிரியார்கள் பால்கனிக்கு வந்து அறிவித்தனர். இதனை கேட்டதும் கூட்டத்தினர் ஜார்ஜ் மரியோ என்று வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். சிறிது நேரத்தில் புதிய போப் ஆண்டவர் பால்கனிக்கு வந்து மக்களுக்கு ஆசி வழங்கினார்.

ad

ad