புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013

தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட 17 ஆப்கானிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலை தூக்கியுள்ளதோடு அரசுப் படையினருக்கு எதிராக திடீர் தாக்குதலில் ஈடுபட்டு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பதக்சான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏராளமான தலிபான் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சுற்றிவளைத்து, வீரர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். நேற்று இரவு வஜ்ரஜ் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொன்ற அந்த 17 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுபற்றி மாகாண காவல்துறை துணைத்தலைவர் கூறுகையில், ”17 வீரர்களை எதிரிகள் கொலை செய்துள்ளனர். அவர்களின் உடல்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற 7 வீரர்கள், சில தலிபான் சிறைக்கைதிகள் விடுதலைக்கு பதிலாக விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
பழங்குடி மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு பல வீரர்கள் விடுவிக்கப்பட்டதை மாகாண கவர்னர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால், சிறைபிடித்தபோது நடந்த சண்டையில்தான் வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், இரண்டு வாகனங்களை கைப்பற்றியதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ad

ad