புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2013

531476_358014010982024_1701186491_n

தமிழக அகதி முகாமில் குழந்தையுடன் பங்கேற்ற ஈழத் தாயின் நெஞ்சை உருக வைக்கும் போராட்டம்!


இனவாத அரசுக்கு எதிராக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் முகாமில் 202 குடும்பங்களை சேர்ந்த 872 பேர் (ஒரு வயது குழந்தை முதல் 73 வயது முதியவர்கள் வரை) பட்டினி
போராட்டம் நடத்தினர்.
ஆறு மாதமே ஆன பச்சிளம் குழந்தையுடன் பங்கேற்ற தாய் ஒருவரும் பங்கேற்றார்.
குழந்தையிடம் குடிக்க கொடுத்திருந்த பால் புட்டியில் பாலுக்கு பதில் வெறும் தண்ணீர் இருந்தது.
அவரிடம் கேட்டேன்..! நமது போராட்டத்திற்காக பச்சிளம் குழந்தையை பட்டினியாக வைப்பது பாவமில்லையா என்று? அவர் சொன்னது…
இன்று மட்டும் தான் நானும் எனது மகனும் உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்…
ஆனால் இவனைப்போல இருபதாயிரம் குழந்தைகள் ஈழத்தில் பாலுக்கு வழியின்றி இறந்து போயுள்ளனர்…
அதனால் இவன் ஆறு மணி நேரம் பட்டினி கிடப்பதால் ஒன்றும் ஆகிவிடாது…

ad

ad