புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2013




            தவி ஏற்ற 21 மாத காலத்தில் எட்டாவது முறையாய் அமைச்சரவையை மாற்றி கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார் ஜெ.’

கடந்த பௌர்ணமி அன்றே அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வரும் என்று மந்திரிகள் மத்தியிலேயே எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் பௌர்ணமி முடிந்த இரண்டாம் நாள் அமைச்சரவை மாற்றப்பட்டது. nakeeran

27-ந் தேதி மதியம் ஜெ.வின் கார் கார்டனில் இருந்து புறப்பட்டதுமே அமைச்சர்கள் மத்தியில் சூடான எஸ்.எம். எஸ் பரிமாற்றம். "இந்த நேரத்தில் கோட்டைக்குப் போகமாட்டாரே.. எங்கே போகிறார்?' என தங்களுக்குள் பரபரப்பாக விவாதித்துக்கொண்டனர். ஜெ.வின் கார் கவர்னர் மாளிகைக்குப் போக, ஜூனியர் அமைச்சர்கள் முதல் சீனியர் அமைச்சர்கள் வரை அனைவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. தங்கள் பி.ஏ.க்களையும் ஹை-அபிஷியல் சோர்ஸ்களையும் பதட்டத்தோடு தொடர்பு கொண்டு "என்ன சார் தகவல் வருது? யார் யார் தலை உருளப்போகுது?' என கவலை யோடு விசாரிக்கத் தொடங்கினர். ஜெ.’ கவர்னரை சந்தித்த கொஞ்ச நேரத்தி லேயே, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி, சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்படுவ தாகவும், புதிய அமைச்சர்களாக அருப்புக் கோட்டை எம்.எல்.ஏ.வும் அரசுக் கொறடாவு மான வைகைச்செல்வன், ஜோலார் பேட்டை எம்.எல்.ஏ. வீரமணி, மண்ணச்சநல்லூர் எம். எல்.ஏ. பூனாட்சி ஆகியோர் நியமிக்கப்படுவ தாகவும் கவர்னர் மாளிகை அறிவித்தது.

அடுத்த கொஞ்ச நேரத்திலேயே கோகுல இந்திரா வகித்து வந்த மாநில மகளிரணி செயலாளர் பதவியும் டாக்டர் விஜய் வகித்து வந்த வேலூர் மா.செ. பதவியும் சிவபதி வகித்துவந்த திருச்சி புறநகர் மா.செ. பதவியும் பறிக்கப்படுவதாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பை வெளி யிட்டது. இப்படி மூன்று அமைச்சர் களின் தலை உருளக் காரணம் என்ன? என கோட்டைத் தரப்பிலும் கார்டன் தரப்பிலும் விசாரித்தபோது ஏகத்துக் கும் தகவல்கள் கிடைத்தன. ""பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்து, தற்போது பதவியை இழந்திருக்கும் சிவபதி, வழக்கறிஞருக்குப் படித்து விட்டு ஆரம்பத்தில் விவசாயம் பார்த் துக்கொண்டிருந்தார்.  பின்னர் கட்சி விவகாரத்தில் தலைகாட்டியவர் திருச்சி மண்டல அ.தி.மு.க. பொறுப்பாளராக இருந்த  கலியபெருமாள் (இளவரசியின் சம்பந்தி) மூலம் எம்.எல்.ஏ.சீட் வாங்கினார். இதற்காக நிறைய செலவு செய்தார். பின்னர் அப்போது கட்சியில் கோலோச்சிக்கொண்டிருந்த ராவணனின் நட்பு பெற்ற சிவபதி, அவர் தயவில் அமைச்சரானார். முதலில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைதான் அவருக்குத் தரப்பட்டது.  

இந்த நிலையில் ராவணன் ஒருமுறை போன் போட்டபோது, சிவபதி எடுக்கவில்லை. இதனால் டென்ஷனான ராவணன், "சிவபதி பதவியைக் காலி பண்ணினார். இடையில் சசி தரப்பு அதிரடியாய் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, "ராவணன் என்னை அடிமைபோல் நடத்தினார். அவர்தான் வேண்டுமென்றே என் பதவியைப் பறிக்கச்செய்தார்' என்றெல்லாம் உருக்கமுடன் கார்டனுக்கு சிவபதி கடிதம் எழுத, இதன்பிறகே சிவபதி மீண்டும் ஜெ.வால் அமைச்சராக்கப்பட்டார். பவர்ஃபுல்  போஸ்ட்டான பள்ளிக் கல்வித்துறையும் அவருக்குத் தரப்பட்டது. 

‘இரண்டாவது முறை பதவியில் அமர்ந்த சிவபதி, "முதல்முறை அமைச்சரான போது போர்ட்போலியோவில் 27-வது இடத்தில் இருந்த நான் இப்போது 7- வது இடத்திற்கு வந்திருக்கேன். அடுத்து ஓ.பி.எஸ். இருக்கும் இரண்டாவது இடத்திற்கும் வருவேன்'னு பகிரங்கமாக கட்சிப் புள்ளிகளிடம் பேச ஆரம்பிச்சார். போஸ்டிங் போடுவதில் இருந்து டிரான்ஸ்பர் போடுவது வரை டாப் டூ பாட்டம் நல்ல கலெக்ஷன் பார்த்தார். சக மந்திரிகள் சிபாரிசு செய்தால் கூட, "உங்க துறையில் நான் தலையிடுறேனா? அதேபோல் நீங்க தலையிடாதீங்க. காரியம் ஆகணும்ன்னா காசு இருந்தாத்தான் ஆகும்'ன்னு கறார் காட்டினார். சமீபத்தில் கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனன் தன் பேத்திக்கு டீச்சர் வேலை கேட்டுப்போக, அவரிடமும் "காசு இருந்தால்தான் வேலை நடக்கும்' என்றார் சிவபதி. இதைக்கேட்டு டென்ஷனான மதுசூதனன், கார்டன்வரை புகாரைக்கொண்டு போய்ட்டார்.  

இதுபோன்ற புகார்களால்தான் பதவியைப் பிடுங்கிட்டாங்க'' என்றார்கள் விபரமறிந்த இலைப்புள்ளிகள். சிவபதியால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என நொந்துபோயிருந்த திருச்சி பகுதி பொறுப்பாளர்கள், அவர் பதவி பறிபோனதை அறிந்து பார்ட்டி வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். 

டாக்டர் விஜய் விவகாரம் என்ன? 

""விஜய் நீண்டகாலக் கட்சிக்காரர் இல்லை. திடீர்ன்னு அ.தி.மு.க. மருத்துவ அணிப்பொறுப்பை காசு கொடுத்து வாங்கினார். பிறகு சசிக்கு நெருக்கமான ஒருவர் மூலம் கரன்ஸி ரூட்டில் எம்.எல்.ஏ. சீட் வாங்கி பெரிய விலைகொடுத்து மந்திரியான வர். முதலில் விபரம் தெரியாதவராய் இருந்த இவருக்கு, கலெக்ஷன் பாலிஸியைக் கற்றுக்கொடுத்ததே அவரது உதவியாளர் தாஸ்தான். அவர் கொடுத்த டிரெய்னிங் கில் மருத்துவர்களின் போஸ்டிங், டிரான்ஸ்பர்ன்னு எல்லாத்திலும் தானே கறாரா பேசி காசுவாங்குவார். மேலிடத்துக்கு இவ்வளவு கொடுக்கணும். எனக்கு இவ்வளவு கொடுக்கணும் என்று பகிரங்கமா பேசுவார். இப்படிப்பட்ட விஜய்யின் பதவி, டெண்டல் கவுன்சில் விவகாரத்தால் பறிபோகும்ன்னு நக்கீரன்தான் முதன்முதலில் அடித்துச்சொன்னது. அதேபோல் ஆகிவிட்டது'' என்றார்கள் அழுத்தமாய்.

அவர்கள் சொன்னது போல் டெண்டல் கவுன்சில் விவகாரத்தை சி.பி.ஐ. கையில் எடுத்தபோதே நக்கீரன்தான் அமைச்சர் விஜய் லஞ்ச விவகாரத்தில் சிக்கியிருப்பதை முதன்முதலில் அடித்துச்சொன்னது.  பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தரும் அதிகாரமுள்ள அகில இந்திய டெண்டல் கவுன்சில், புரோக்கர்கள் மூலம் கல்லூரித் தரப்புகளிடம் லஞ்சம் வாங்கும் விவகாரத்தைக் கையிலெடுத்த சி.பி.ஐ. டெண்டல் கவுன்சிலுக்கு புரோக்கர்களாக செயல்படுபவர்களைக் கண்காணித்தது. அப்படி சி.பி.ஐ.யின் கண்காணிப்பில் சிக்கியவர்தான் டாக்டர் முருகேசன்.

இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரிக்கு, மேல் வகுப்புகள் தொடங்க, முருகேசன் மூலம் பேரம் நடந்தது. அமைச்சராக இருந்த விஜய்யின் புரோக்கராகவும் செயல்பட்ட டாக்டர் முருகேசனின் போன்களை ட்ரேஸ் செய்தனர். அப்போது முருகேசன் அமைச்சராக இருந்த டாக்டர் விஜய்யோடு அடிக்கடி உரையாடியதையும் லஞ்ச பேரங்கள் குறித்து விவாதித்ததையும் சி.பி.ஐ. ஆதாரமாகப் பதிவு செய்தது. அமைச்சராக இருக்கும் விஜய்மேல் முதலில் கைவைக்காமல், அவரது புரோக்கரான டாக்டர் முருகேசனை மடக்கத் திட்டமிட்டனர். சரியாக கல்லூரித் தரப்பிடம் லஞ்சம் வாங்கும் போது அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த விவகாரத்தை ’கம்பி எண்ணும் பினாமி, சி.பி.ஐ. பிடியில் தமிழக அமைச்சர்’ என்ற தலைப்பில் ஜனவரி 12-13 தேதியிட்ட நக்கீரன் இதழில், அட்டைப்படக் கட்டுரையாகத் தந்திருந்தோம். அந்தக் கட்டுரையிலேயே தமிழ்நாடு டெண்டல் கவுன்சில் தலைவராக இருக்கும் குணசீலனுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டினோம். அவரும் அடுத்து கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை வெளிப்படுத்தியதால் அமைச்சராக இருந்த விஜய், நக்கீரன் மீது இரண்டு வழக்குகளைத் தொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, தனது அமைச்சர் விஜய்யை விசாரணைக்கு சி.பி.ஐ. அழைக்க இருப்பதை அறிந்த ஜெ. இதனால் தனக்கும் சங்கடங்கள் ஏற்படும் என்று நினைத்து மந்திரி சபையில் இருந்து கல்தா கொடுத்துவிட்டார். 

கோகுல இந்திரா. அதிக வருமானம் புரளாத துறை. எனினும் கணவர், சகோதரர் ஆகியோரின் தலையீடுகள் அதிகம் என்ற குற்றச்சாட்டுக்கள் கொஞ்ச நாளாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், "எங்களை அமைச்சர் மதிப்பதில்லை. நாங்கள் கேட்கும் சிபாரிசுகளை செய்துதருவதில்லை'‘என்றெல்லாம் மகளிரணித் தரப்பிடமிருந்து கார்டனுக்கு ஏகத்துக்கும் புகார்கள் போனது. சிவகங்கையைச் சேர்ந்த ஒரு மகளிரணிப் பிரமுகர் விபத்தில் சிக்கியபோது, அவரை கோகுல இந்திரா விசாரிக்கக்கூட இல்லையாம். இப்படி பல்வேறு அதிருப்தியை சம்பாதித்ததால்தான் கோகுல இந்திராவும் நீக்கப்பட்டிருக்கிறார்.

சரி, புதிய அமைச்சர்கள் எப்படி?

வைகைச்செல்வன் முன்னாள் சபா காளிமுத்துவோடு நெருங்கி இருந்தவர். இலக்கியவாதி. திரைப்பாடல் கூட எழுதியிருக்கிறார். அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆரை எதிர்த்து வென்ற இவரை கொறடா ஆக்கினார் ஜெ. இப்போது அவரை பள்ளிக்கல்வி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அமரவைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, இவர் தனி ஆவர்த்தனம் நடத்திவந்தார். வைகையின் ஆதரவாளர்களோ "இனி எங்க கோஷ்டி பலமானதா ஆயிடும். விரைவில் ராஜேந்திர பாலாஜிக்கிட்ட இருக்கும் மா.செ.பதவியும் எங்க அண்ணனுக்கு கிடைச்சிடும்' என்கிறார்கள் தெம்பாய். 

சுகாதாரத்துறை அமைச்சராக ஆக்கப்பட்டிருக்கிறார் ஜோலார் பேட்டை எம்.எல்.ஏ.வான வீரமணி. இவரது குடும்பம் தீவிர திராவிடப் பற்றுகொண்ட குடும்பம். இவரது அண்ணன் அழகிரி தி.மு.க.வில் ஒரு முறை எம்.எல்.ஏ.வுக்கு நின்று தோற்றவர்.  கொஞ்சம் கோபக்காரர் என்று வர்ணிக்கப்படும் இவர், ராஜீவ்காந்தி வழக்கில் சிக்கியிருக்கும் பேரறிவாளனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையின் மற்றொரு புதுமுகமான பூனாட்சி, மண்ணச்சநல்லூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர். திருச்சி மாவட்டத்தில் முத்தரையர் சமூகத்திற்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றுதான் சிவபதியை அமைச்சராக்கி னார் ஜெ. அவர் போன முறை பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது அதே சமூகத்தைச் சேர்ந்த பூனாட்சி பற்றி உளவுத் துறையிடம் ஜெ. ரிப்போர்ட் கேட்டார். இதையறிந்த பூனாட்சி ‘"தயவு பண்ணி என்னை சிபாரிசு பண்ணிடா தீங்க. நான் 8-ஆம் வகுப்பு மட்டும்தான் படிச்சிருக் கேன். நமக்கு மந்திரி பதவி யெல்லாம் லாயக்குப்படாது'’ என்று உளவுத்துறை அதி காரிகளிடம் கெஞ்சினார், எனவே சிவபதி இருந்த இடத்தில் பரஞ்ஜோதி உட்காரவைக்கப்பட்டார். அவர் பெண் தொடர்பான வழக்கில் சிக்க, மீண்டும் சிவபதியையே அமைச்ச ராக்கினார். இப்போது பல்வேறு புகார்களுக்கு சிவ பதி ஆளானதால் அவருக்கு பதில், பதவி வேண்டாம் என்று சொல்லிவந்த பூனாட்சியையே மந்திரி யாக்கிவிட்டார் ஜெ. இவ ருக்கு காதி மற்றும் கிராமத் தொழில்துறை கொடுக்கப் பட்டிருக்கிறது.

எதிர்பார்த்த அமைச்சரவை மாற்றம் நடந்துவிட்டதால், கொஞ்ச நாளைக்கு நிம்மதியாக மூச்சுவிடலாம் என்று கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருக்கிறார்கள் ஏனைய அமைச்சர்கள். அடுத்த மந்திரிசபை மாற்றத்தின் போது யார் யார் தலை உருளலாம் என்று ஒரு பட்டிமன்றமும் அவர் களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது.

-நமது நிருபர்கள்
படங்கள்: ஸ்டாலின் & அசோக்

ad

ad