புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2013


பாலச்சந்திரனின் ரத்த துளிகள்தான் எழுச்சிக்கு காரணம்! விக்ரம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ பேட்டி!
21.03.2013 அன்று தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் சென்னை நெற்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடந்துள்ளது. அப்போது மேடையின் பின்புறத்தில் ஈழம் வாழ்க ஈழம் வாழ்க, இந்தியா ஒழிக இந்தியா ஒழிக என பலத்த சத்தத்துடன் குரல் கேட்டதை கண்டு
அனைவரும் ஓடிபோய் பார்த்துள்ளனர். அப்போது 30 வயது மதிக்கதக்க இளைஞர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். பதறிப்போய் அங்கிருந்தவர்கள் அவர் மீது உள்ள தீயை அணைக்க முயற்சித்தபோது, தீ மளமளவென அவர் உடலெக்கும் பற்றியது. பின்னர் தீயை அணைத்து ஆம்புலன்ஸ்சில் ஏற்றினர். அப்போது அவரிடம் ஏன் தீக்குளித்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.

நம் தமிழ் ஈழ மக்களுக்கு துரோகம் இழைந்த இந்த இந்தியாவில் எப்படி உயிர் வாழ்வது. இந்தியாவில் வாழ பிடிக்கவில்லை. அதனால்தான் தீக்குளித்தேன். ராஜபக்சேவை கண்டிக்க வேண்டும். ராஜபக்சேவை தூக்கில் போட வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காலையில் சிகிச்சிசை பலனின்றி உயிரிழந்தார். அவரது பெயர் விக்ரம் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை வானகரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். தமிழின உணர்வாளரான இவர் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட படம் வெளியானதில் இருந்தே, சரியாக சாப்பிடாமலும், தூங்காமல் அதுபற்றியே பேசிக்கொண்ருப்பாராம். தமிழ் ஈழம் சம்மந்தமாக ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் நடந்தால் முதல் ஆளாக நிற்பார். 
விக்ரம் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, தா.வெள்யைன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 
அப்போது பேசிய வைகோ,
முத்துக்குமார் தொடங்கி மணி, இப்போது விக்ரம் இதே இடத்தில் இந்த நிலையில் பார்க்க வேண்டியிருக்கிறது. தயவு செய்து இளைஞர்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். இதுபோல் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேலையை யாரும் செய்ய வேண்டாம். என் தம்பி மார்கள், மாணவர்கள் ஆகியோர்களின் போராட்டம் விலைமதிப்பற்றது. இந்த மாணவர்களின் வீரம், தியாகம் எந்த மாகாணத்திலும் நடந்தது இல்லை. 
இளைஞர்கள் செய்ய வேண்டியது, சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. 65 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் நாட்டில் மாணவர்களின் எழுச்சி இப்போதுதான் நடக்கிறது. மாணவர்கள் மக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல், அமைதியாகவும், அகிம்சையாகவும் பசியும் பட்டிணியுமாக கிடந்து போரட்டங்களை நடத்தி வருகின்றனர். 
இன்னும் நாம் போராட வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் நினைத்தது நிச்சயம் நிறைவேறும். யாரும் தங்களது ஈடு இணையற்ற உயரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.
பாலச்சந்திரனின் ரத்த துளிகள்தான் மாணவர்களின் இந்த மாபெரும் எழுச்சிக்கு காரணம். சுதந்திர ஈழம் ஒன்றுதான் தீர்வு. இனப்படுகொலைக்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும். இதை தவிர நாம் வேறு எதையும் கேட்கவில்லை. 
இப்போது எங்கு பார்த்தாலும் ஈழம், பிரபாகரன், ஈழ விடுதலை போன்ற கோஷங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இதற்கு முழுக்க காரணம் மாணவர்களின் போராட்டங்கள்தான். 
இந்தியா இலங்கை சேர்ந்து அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப்போக செய்துவிட்டனர். சென்ற வருடம் இதேபோல் இந்தியா மழுப்பியபோது தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பியதும் பணிந்தது. இந்த வருடமும் இதேபோல் தீர்மானத்தை ஒப்புக்காக ஆதரவு தெரிவித்துள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாமல் இப்போது பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்கும் வரை நம் போராட்டம் பல்வேறு வடிவில் வெடிக்கும். விக்ரம் வைத்த இந்த நெருப்பு கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் கொழுந்து விட்டு எரியும். இந்த இழப்புகள் வீண்போகாது. மாணவர்களுக்கு நம் தமிழ் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது. விக்ரமுக்கும் எங்களது வீரவணக்கம். விக்ரமின் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறே

ad

ad