புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013

2 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை....
கூடாரம் கூட இல்லாத வெட்டவெளி சாலை...
மூன்றாவது நாளாக... 
நடுங்கும் குளிரில்...
.
.
.
மாண்புமிகு. திராவிடன்...
மாண்புமிகு. தமிழ் தினேஷ்...
மாண்புமிகு. தினேஷ்...
.
.
.
மாணவர்கள்....

எதுவுமே புரியவில்லையா?

லண்டனில் அமைந்து இருக்கும் Indian High Commission ன் முன்னால் நான் கண்ட உண்மையான "மாண்புமிகுக்களும்" அவர்கள் எதிர்கொள்ளும் சவால்க்களும்தான். மூன்றாவது நாளாக தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நிஜ ஹீரோக்கள்தான் இவர்கள்.

"என் உரிமைகளுக்காகவும், இயல்பான வாழ்க்கைக்காகவும் தமிழகத்தில் உண்ணாமல் இருக்கும் என் சகோதர, சகோதரிகளின் வலியை நானே உணரவில்லை என்றால் மனிதனாக நான் பிறந்து என்ன கண்டேன்" - தீர்க்கமாக சொல்லுகிறார் மாண்புமிகு. திராவிடன்.

"அண்ணா! கவலை படாதீர்கள்... தையிரியமாக இருங்கள். விடிவும், நியாயமும் நிச்சயம் கிடைக்கும்" - ஆறுதல் சொல்ல போன என்னிடமே உற்சாகத்துடன் ஆறுதல் சொல்லுகிறார் மாண்புமிகு. தமிழ் தினேஷ்.

"லண்டன் போலீஸ் கூட பலமுறை எங்களை வந்து விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், இங்கேயே இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே எங்களை எட்டி பார்க்கவில்லை" - கண்களில் சோர்வு தெரிந்தாலும், சொந்த நாட்டாலே வஞ்சிக்கப்பட்டதால் வந்த வேதனை தெரிகிறது மாண்புமிகு. தினேஷின் பேச்சில்.

அவர்களின் கரங்களை பிடித்து "மதம், இனம், மொழி கடந்து ஒரு மனிதனாக உங்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்" என்று சொல்லும்போதே கண்களில் வடிந்த நீரை மறைக்க போராடி தோற்றுபோனேன். 

***அவர்களின் ஒரே கோரிக்கை, "மக்களுக்காக போராடும் என் தமிழக சகோதர, சகோதரிகளுக்கு தயவுசெய்து சொல்லுங்கள்....நாடுகடந்து கூட உங்களோடு தோள் கொடுக்க உங்களின் உடன்பிறப்புகள் நாங்கள் இருக்கிறோம்" என்று.***

நன்றி  : mano jo.

ad

ad