புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஊடகங்களை அணுகிய முறை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு பணிப்புரை விடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபைக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் 3ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.


இதனடிப்படையில் புதிய ஒப்பந்தம் நேற்று முன்தினம் 3ஆம் திகதியிலிருந்து செயற்படுத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அடுத்த ஆண்டிற்கான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து எதிர்வரும் ஆண்டிற்கான ஒப்பந்தத்தில் கையழுத்து இடுவது தொடர்பில் நேற்று முன்தினம் முக்கிய கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடல் முடிந்து வந்த வீரர்களில் சிலர் ஊடகங்களுக்கு சரியான முறையில் பதிலளித்தனர். இதன் போது வந்த லசித்த மாலிங்கவிடம் 'ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டீர்களா?" என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு 'நான் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவரவில்லை. நான் விருந்துபசாரத்துக்கே வந்தேன். ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வந்தவர்களிடம் சென்று இதனை கேளுங்கள் என அநாகரிகமான முறையில் பதிலளித்துச் சென்றார்.

இதனையடுத்து நேற்றைய தினம் அடுத்த ஆண்டிற்கான புதிய ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 22 பேர் கைச்சாத்திட்ட பின்னர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வெளியே வந்த மாலிங்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை தொடுத்த போது, கோபமுற்ற மாலிங்க 'இதற்கு முன்னர் என்னை பார்த்தது இல்லையா? உங்களுடைய வேலையை பாருங்கள்" என ஊடகவியலாளர்களை ஏசிவிட்டுச் சென்றார்.

இதனையடுத்து ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கான லசித் மாலிங்க தொடர்பில் மிக விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு அறிவித்துள்ளது.
மாலிங்கவின் செயற்பாடு குறித்து மாலிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வாசகர்களின் பதிவு செய்துள்ள கருத்துக்கள்..

ad

ad