புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2013

காணாமற்போனோர் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிப்பு
காணாமற்போனவர்கள் தொடர்பில் எமது அமைப்பிடம் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பேர் தொடர்பான முறைப்பாட்டில் 3 ஆயிரம் பேரின் முறைப்பாடுகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எஞ்சியோரின் முறைப்பாடுகளையும் அங்கு அனுப்பு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரம் தெரிவித்தார்.

காணாமற்போன 37 பேர் தொடர்பில் நேற்றைய தினம் (உதயனில்) வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்கள் தன்னுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின் போதும் அதற்கு முன்னரும் போரின் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் இலங்கையில் காணாமற் போயுள்ளனர்.

காணாமற்போனவர்களின் உறவினர்களால் காணாமற்போனவரைத் தேடிக் கண்டறியும் குழுவுக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதுவரை 5 ஆயிரம் பேர் வரையில் காணாமற்போயுள்ளனர் என அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதில் 95 வீதமான முறைப்பாடுகள் தமிழ் மக்களுடையவை. எஞ்சியவை முஸ்லிம் மக்களதும், சிங்களவர்களுடையதும் ஆகும்.

எமது அமைப்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 3 ஆயிரம் முறைப்பாடுகள் வரை ஜெனிவாவுக்குச் சமர்ப்பித்துள்ளோம். எஞ்சியோரின் முறைப்பாடுகளையும் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும் காணாமற்போனவர்களாகச் சொல்லப்பட்ட 37 பேரை இலங்கை அரசு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி வருவது தொடர்பில் நேற்று எங்களால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த 37 பேரில் 25 பேரின் உறவினர்கள் வரை எங்களுடன் தொடர்பு கொண்டனர். அவர்களின் உறவுகள் இலங்கை அரசால் எங்கு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்ற விடயத்தை தெரிவித்துள்ளோம்.

அத்துடன் நூற்றுக்கணக்கானோர் என்னுடன் தொடர்புகொண்டு காணாமற்போன பதிவு செய்யாத காணாமற்போனவர்களின் உறவினர்கள் பதிவு செய்துகொள்ள விரும்பினால் 0776400478 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றார். 

ad

ad