புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2013


மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு டெசோ அமைப்பு சென்றதால் பரபரப்பு
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-வது நாளாக தொடர்கிறது . 
இன்று சற்று சோர்வடைந்த நிலையில் மாணவர்கள் உள்ளனர்.
மக்கள் எழுச்சியாக ஆயிரக்கணக்கில், பொது மக்கள், மாணவர்கள், அனைத்து கட்சி தொழிற்சங்க உறுப்பினர்கள் அங்கு சென்று தங்கள் ஆதரவினை தெரிவித்து கொண்டுள்ளனர் .
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் , காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் அங்கு சென்று மாணவர்களிற்கு ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து டெசோ அமைப்பின் உறுப்பினர்களான விடுதலைச்சிறுத்தைகள், திருமாவளவன், வன்னி அரசு, சுப. வீரபாண்டியன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர், இளங்கோவன் மற்றும் பல உறுப்பினர்கள் அங்கு சென்றனர்.
மாணவர்கள் இருக்கும் மேடைக்கு சென்ற சு.ப. வீரபாண்டியன், மாணவர்களிடத்தில் உண்ணாவிரத கோரிக்கையை மாற்றி அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அறிந்த உணர்வாளர்கள் அவருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.
இந்தியாவின் கைக்கூலிகளே வெளியேறு!
தமிழ் இனத் துரோகிகளே வெளியேறு!!
சோனியாவின் கைப்பொம்மைகளே வெளியேறு!!
என்று அவர்களது கோசங்கள் இருந்தது.
அவர்கள் சுப வீரபாண்டியனைத்தான் எதிர்த்து கோசம் போட்டார்கள் ஆனால் ஆத்திரமடைந்த, சுப வீரபாண்டியனோடு வந்த சிலர், அங்கிருந்த உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது அடிக்கச் சென்றதால் அவர்களிற்கு இடையே தள்ளுமுள்ளும் கைகலப்பும் ஏற்பட்டது.

ad

ad