புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013


கொக்குத் தொடுவாயில் 500 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! பறிபோகும் தமிழர்களின் கிராமங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், முழு வீச்சில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள மாவட்ட மக்கள், கொக்குத்தொடுவாய் வடக்கு,
கரடிக்குளம் கிராமத்தில் 500 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்காக, 500அரைநிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
1984 ஆம் ஆண்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த கொக்குத்தொடுவாய் மக்கள் 2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். எனினும் கிராமத்திற்கு பின்னாலுள்ள காட்டை அண்டிய பகுதிகளுக்குச் செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காட்டை அழித்து அந்தப்பகுதியில் அரைநிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகள் மிக இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இது குறித்து மாவட்ட அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு தொடர்ச்சியாக குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டுவருகின்றது.  மேலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான உறுதிக் காணிகளில் சுமார் 150 சிங்கள குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான உறுதி மொழியினை அண்மையில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன வழங்கியுள்ளார்.
மேலும் முல்லைத்தீவு திருகோணமலை வீதியில் கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமசேவகர் பிரிவில் 15 ஏக்கர் காட்டை அழித்து அந்தப்பகுதியில் நிரந்தர படைமுகாம் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்துடன் யுத்தத்தின் பின்னர் இணைத்துக் கொள்ளப்பட்ட, வெலிஓயா பிரதேச செயலர் பிரிவினை முற்று முழுதாக சிங்கள பிரதேச செயலர் பிரிவாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்காக பரந்தளவில் சிங்கள மக்களை திட்டமிட்டு குடியேற்றும் செயல்முறையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனினும் இதனால் பாதிக் கப்படும் தமிழ் மக்கள் தொடர்பில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்,மௌனமாக இருந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ad

ad