புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013

வவுனியாவில் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நாமல் கிராமம் : அசாத் சாலி


வவுனியாவில் நாமல் கிராமம் உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கையில் வசிக்கின்ற சிங்கள மக்கள் துறைமுகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி வவுனியாவில் குடியேற்றப்படுகின்றனர். அங்கு குடியேற்றம் இடம்பெற்ற இடத்திற்கு புதிதாக நாமல் கிராமம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வடக்கில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுகின்ற அதேநேரம் தெற்கில் காணிகள் சீனாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதேவேளை, இவ்வாறு குடியேற்றப்படும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 3 ஏக்கர் காணியும் துவிச் சக்கர வண்டியும் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்
.

ad

ad