புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2013

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

ஆர். பிரேமதாஸ மைதானத்தில் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் சார்பில் ஹேக் 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

இலங்கை அணி சார்பில் பந்துவீசிய ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களையும் குலசேகர மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

பதிலுக்கு முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 139 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

இந்நிலையில் இரண்டாவது இனிங்சிற்காக களம் இறங்கிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

ரங்கண ஹேரத் மீண்டும் சிறப்பாக பந்து வீசி ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் வெற்றி பெறுவதற்கு 160 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

குமார் சங்கக்கார 55 ஓட்டங்களையும் டில்சால் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

ad

ad