புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2013



லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்
சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த 8 மாணவர்கள், மனித உரிமையை மீறிய இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 4 நாட்களாக சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள், தமிழ் அ
மைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.


மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவரும் வரை தங்கள் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறிவந்தனர். நேற்று நள்ளிரவு அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ராயாபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 8 மாணவர்களும் தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்கள். அவர்களுக்கு குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்பபட்டது. வேறு எதையும் சாப்பிட மறுத்துவிட்டனர். இவர்களை பார்ப்பதற்காக லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெயசீலன் என்பவர் மாணவர்களை சந்தித்து பேசினார். பின்னர் வெளியில் வந்த அவர் கூறும்போது, உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டு வேறு வழிகளில் போராடுமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.


இதையடுத்து இன்றுமாலை உண்ணாவிரதம் இருந்த 8 மாணவர்களும் ஆஸ்பத்திரியில் இருந்து விடுவிக் கப்பட்டனர். உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதை ஏற்றதால் மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ad

ad