புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2013

புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது 

இன்று காலை 8  மணியில் இருந்து விசேச அபிசேக ஆராதனைகளுடன் ஆரம்பித்து வசந்த மண்டப பூசையுடன் தீபாராதனை இடம்பெற்றதை

தொடர்ந்து விநாயகர்  கோலாகலமாக புறப்பட்டு உள்வீதி வளம் வந்து புதிதாக  பல லட்சம் ரூபா   செலவில் அழகாக நிர்மாணிக்கப் பட்ட புதிய சிற்ப தேரில் எழுந்தருளினார்  அடியார்களுக்கு அருள்  பாலிக்கவென தேருலா வரும் அருள்மிகு கலட்டி விநாயகரை தொழ வென புங்குடுதீவு வாழ் மக்கள்  மட்டுமன்றி இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் உள்ளூர் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும்  இருந்து வந்திருந்த மக்களும் கூடி இருந்தனர் .விழாவுக்கு நல்லை ஆதீனம் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார் . இந்த ஆலயத்தின் பரம்பரை அர்ச்சகரான கனடா வாழ் ஐயாமணி என அழைக்கபப்டும் விஜயபாஸ்கர குருக்கள் அவர்கள்  தாயகம் சென்று இந்த மகோத்சவ கிரியைகளில் கலந்து சிரபீகிரார் அவரின்  அற்புதமான வலி நடத்தலில் இந்த ஆலயம் அதியுன்னத வளர்ச்சி கண்டு வருகிறது இவரது நல்லெண்ண வெளிப்பாடாக நல்லை ஆதீனத் தின் செயல்பாட்டுக்கும் கணேச  வித்தியாலய வளர்ச்சிக்கும் ஆலய முன்றலில் நடைபெறும் அறவழிப் பாடசாலைக்கும் என நிதியுதவிகளை வழங்கி பெருமை சேர்த்தார் .ஆலயம் அண்மையில் வெகு அழகாக புனருத்தாரணம் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது . கைலாச வகானம் திருமஞ்சம்  சிற்பத் தேர் என்பவற்றை வடிவமைத்த சிற்பாச்சாரியர்களை கௌரவம் செய்து மகிழ்வித்த நிகழ்வோடு கனடாவில் இருந்து வந்திருந்த ரமணன் ஐயாவின் இசைக்கச்சேரியும் இடம்பெற்றது  அனைத்து நிகழ்வுகளையும் சுவிஸ் சிவன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு  செய்தது . விசேசமாக விநாயகப் பெருமானின் வடிவில் கஜமுகனாக யானை ஒன்றும் வரவழைக்கப் பட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி இருந்தது படங்களை எமது இணையத்தில் கண்டு மகிழலாம்



























































ad

ad