புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2013


ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 237 ஓட்டங்கள் எடுத்து “டிக்ளேர்” செய்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என்று தொடரி
ல் முன்னிலை பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணியின் அணித்தலைவர் கிளார்க் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அவுஸ்திரேலியா அணியில் லியான், ஸ்டார்க் நீக்கப்பட்டு மேக்ஸ்வெல், தோகர்டி சேர்க்கப்பட்டனர்.
அவுஸ்திரேலியா அணிக்கு வார்னர், கோவன் ஜோடி தொடக்கம் கொடுத்தது. முதலில் வார்னரை 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்த புவனேஷ்வர் குமார் பின்னர் கோவனையும் 4 ஓட்டங்களில் வெளியேற்றினார்.
தொடர்ந்து தனது ஆதிக்கத்தை தொடர்ந்த புவனேஷ்வர், வாட்சனையும் 23 ஓட்டங்களில் பெவிலியன் திருப்பினார்.
மறுமுனையில் அரைசதம் கடந்த வேட் 62 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். நீண்ட நேரம் நிலைத்திருந்த கிளார்க் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 237 ஓட்டங்கள் எடுத்து “டிக்ளேர்” செய்தது.
இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார், ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய், ஷேவாக் ஜோடி களம் கண்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்கள் எடுத்தது. முரளி விஜய் ஓட்டங்கள் ஏதுமின்றியும், ஷேவாக் 4 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

ad

ad