புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2013


ஐநா மனித உரிமைகள் மகாநாட்டிற்கு முன்னேற்பாடான தமிழர் உரிமை மகாநாடு ஜெனிவாவில் ஆரம்பம்! மகஜர் கையளிப்பு

இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்பின் சம்பவத்தை விளக்கமளிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மகாநாடு 9.30 மணியளவில் ஜெனிவா நகரில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேந்திரன, சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன் மற்றும்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னமபலம், செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன் உட்பட,
 கனடா பா.உ, தென்னாபிரிக்க அமைச்சர், நோர்வே பா.உ, மொறிசியஸ் பிரதிநிதிகள், இந்திய நாட்டின் சார்பில் டாக்டர் கிருஸ்ணமூர்த்தி நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன், கணேசமூர்த்தி பா.உ, லண்டன் பா.உ, அயர்லாந்து பிரதிநிதிகள், மலேசியா, இத்தாலி, பிரான்ஸ், குறிப்பாக தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இருந்து வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன்  உலகின் முன்னணி ஊடகங்களான Raj, Al.jazeera, Messfgero, Lankasri  பலவும் இங்கு கலந்து கொண்டுள்ளன.
மேலதி தகவல்கள் இணைத்துக் கொள்ளப்படும்.
2ம் இணைப்பு
இலங்கையின் மீது சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பான்கீ மூனிற்கான அறிக்கை அவரின் பிரதிநிதியி​டம் கையளிப்பு
நேற்று மாலை 6.00 மணியளவில் ஜெனிவா அனைத்துலக மகாநாட்டு மண்டபத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றி ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் பல்லின மக்கள் முன் உரையாற்றினார். அதில் குறிப்பாக தமிழ் மக்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். இக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னனி கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நடந்த இன அழிப்பிற்கு சர்வதேச சுயாதீன விசாரணையை ஐநாவும் சர்வதேச சமூகமும் விரைவு படுத்தி பாதிக்கப்பட்ட இனத்திற்கு தீர்வு வழங்க காலம் தாழ்த்தாது சர்வதேசம் விரைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தி அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாக ஐநா செயலாளர் முன் அவரது பேச்சாளர் மார்ரின் நெர்ஸ்கியிடம் (MARTIN NESIRKY) மகஜர் கையளிக்கப்பட்டது.
3ம் இணைப்பு
ஐநா மனித உரிமைகள் மகாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் ஈழத் தமிழர் மக்களவையினால் ஜெனிவா நகரில் ஆரம்பமான தமிழர் பாதுகாப்பு தொடர்பான போர்க்குற்றம் மானிட குலத்திற்கு எதிரான குற்றங்கள் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் காலை அமர்வின் முதல் பகுதி அமைந்திருந்தது.
தமிழர்களின் உரிமைக்காக களமாடி வீழ்ந்த சுதந்திர போராளிகளுக்கும் தமக்கு சாவு வருமென தெரிந்தும் இறுதிவரை வன்னி மண்ணோடு வாழ்ந்து மடிந்த தமிழ் மக்களுக்கும் மௌன அக வணக்கத்துடன் ஆரம்பமான அமர்வில் தமிழர் தேசத்தின் மீது சிறிலங்கா ஆட்சிப்பீடம் மேற்கொண்டு வரும் இன அழிப்பினையும் அதற்கு நீதி தேடும் நடவடிக்கைகளையும் மையப்படுத்தி கருத்தாடல்கள் நகர்கிறது
இராஜதந்திரிகள் வெளிநாட்டு உள்நாட்டு அரசியல் வாதிகள் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொள்ளும் இச் சர்வதேச மகாநாட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கையரசின் தொடர்ச்சியான இனச் சுத்திகரிப்பின் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது இம் மகாநாட்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனுடன் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத் தாம் ஆட்சி புரியும் நிலையும் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அமர்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பில் சர்வதேசத்தின் ஒரு பகுதியும் உடந்தையாக இருந்து என்ற வாதமும் முனைப்படைந்தது.
நோர்வே கனடா பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தமிழர்கள் சுதந்திரத்துடனும் நீதிக்குமான பயணத்திற்கு தாம் பக்கத் துணையாக இருப்பதாக உறுதி தெரிவித்தனர்.
4ம் இணைப்பு
இலங்கையின் யுத்த அழிவுகளுக்கு நீதி வேண்டி தமிழ் உணர்வாளர் ஜெனிவா அலுவலக முன்றலில் கவனயீர்ப்பு
ஜக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமான நாள் முதல் இன்று வரை ஐநாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் இன உணர்வாளரான திரு கஜன் அவர்கள் இலங்கையில் நடந்த இன அழிப்பின் சாட்சிய புகைப்படங்களை காட்சிப்படுத்தியுள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேவேளை தமிழ் இன அழிப்பினை புத்தகமாகவும் வெளியிட்டு வெளிநாட்டவர்களிடமும் வழங்கிய வண்ணம் உள்ளார்.
இவரது செயற்பாடு தொடர்பாக அவரிடம் வினவிய போது தினமும் நிகழ்வு ஆரம்பமாகும் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை எந்த ஒரு ஆகாரமும் நீர் ஏதும் உள்ளெடுப்பதில்லை எனவும், ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடியும் வரை இவ் அடையாள உண்ணாவிரதம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
பிரான்ஸ நாட்டிலிருந்து இங்கு வந்து இச் செயற்பாட்டை செய்வதாகவும் குறிப்பிட்ட இவர், கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நடை பயணம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- See more at: http://tamilwin.com/show-RUmryDTWNYmu0.html#sthash.qzPJbqG6.dpuf

ad

ad