புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2013




உண்ணாவிரதம் இருந்த 9 மாணவர்கள் மயக்கம்! ஆஸ்பத்திரியில் அனுமதி!

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அருள்ராஜன் தலைமையில் 20 பேர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். 
சனிக்கிழமை 3வது நாளில் 9க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 
மேலும் மற்றவர்களும் சோர்ந்து காணப்படுவதால் அவர்களையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். எங்கள் இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அந்த மாணவர்கள் கூறுகின்றனர்.
- இரா.பகத்சிங்.

ad

ad