புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2013




அமெரிக்கப் பிரேரணை தொடர்பிலான உபமாநாடு: இந்தியா மௌனம் - மேற்குலகம் விடாப்பிடி - சீனா, ரஸ்யா, கியூபா கடும் எதிர்ப்பு!
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணனையின் இரண்டாம் நகல்வரைவு, உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பிலான கருத்தறியும் உப மாநாடொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 13-13ம் திகதிகளில் இந்த பிரேரணை இறுதி வரைவினை சபையில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரேரணை இறுதி வரைவினை மேற்கொள்வதற்காக, நாடுகளது கருத்துக்களை உள்வாங்கும் பொருட்டு நேற்றைய உப மாநாட்டினை அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்தது.

இந்த உப மாநாட்டில் பிரேரணை தொடர்பில் மேற்குலக நாடுகள் இறுக்கமானவும் உறுதியானதுமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்க, இலங்கையின் நேச நாடுகள் சில எதிர்ப்பினைத் வெளிக்காட்டியிருந்தததாகவும், இந்தியா இறுதிவரை மௌனமாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உபமாநாட்டில் இலங்கை தரப்பும் தன்னுடைய கருத்துக்களை வழங்குவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இடம்பெற்றிருந்த இந்த உப மாநாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜெனீவாப் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் ஐ.நா மனித உரிமைச் சபைப்பிரதிநிதி Eileen C. Donahoe அவர்கள் இந்த உப மாநாட்டினை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.

கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்திற்கு பின்னர் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு கூட்டாக தொழில்படுவதற்கு இலங்கை ஒத்துழைக்கவில்லை என்றும் கூட்டுப்பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கும் இலங்கை ஒத்துழைக்வில்லை எனவும் Eileen C. Donahoe அவர்கள் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிசினைக் அமெரிக்காவுக்கு அழைத்துப் பேசியும் பயன் ஏதும் எட்டவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தொடாந்து இலங்கை தரப்புக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட போது ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வதிவிடப்பிரதிநிதி ரவீநாத் ஆரியசிங்க அவர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டது. இராணுவமயமாக்கல் இல்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிவிட்டனர். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன என வழமையான பல்லவியைப்பாடிய இலங்கை தரப்பு அமெரிக்காவின் பிரேரணை தேவையற்றது என தெரிவித்திருந்தது.

தொடர்ந்து சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு ஒத்துப்பாடுவது போல் கருத்துரைந்திருந்த ஜப்பான் இலங்கை அனைத்துலக நாடுகளுடன் ஒத்துழைக்கின்றது. வட கொரியாபோல் இல்லை.
ஆகையினால் இந்தப் பிரேரணை தேவையில்லை என தெரிவித்திருந்தது.

இதற்கு பதில் அளிப்பது போல் கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியம் இந்தப் பிரேரணை அவசியம் தேவை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என கருத்துரைந்திருந்தது.

தொடாந்து வந்த சீனா இலங்கையில் முன்னேற்றம் கண்டுவரும் இனநல்லிணக்கத்துக்கு இந்த பிரேரணை கேடுவிளைவிக்கின்றது என கருத்துரைக் ரஸ்யாவும் தன்பங்கிற்கு இந்தப் பிரேணை அரசியல் உள்நோக்கம் கொண்டதென தெரிவித்தது.

இதே நிலைப்பாட்டில் பாகிஸ்தான் - தாய்லாந்து - வெனுசுவேலா - இந்தோனேசியா - ஈரான் - எக்குவாடர் ஆகிய நாடுகள் பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைக்கான தங்களின் ஆதரவுத் தளத்தினை வெளிக்காட்டி நின்றனர்.

இதில் குறிப்பாக பாகிஸ்தான் அமெரிக்காவின் பிரேரணைக்கு மாறாக தான் ஒரு புதிய பிரேணையினை சிறிலங்காவினை புகழ்ந்துபாடி அமர்வில் வாசித்த போது பல நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு தன்னுடைய வலுவான வலுவான எதிர்பினைக் காட்டியிருந்ததோடு இலங்கையின் மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. அபிவிரித்தி என்பது மக்களின் அடிப்படை விடயங்களில் மாற்றத்தினைக் கொண்டுவராது. இந்த பிரேரணையினை உள்ளடக்கதினை இன்னும் இறுக்கமானதாக வலுவுள்ளதாக மாற்ற வேண்டும் தெரிவித்தது.

ஜேர்மனி - பிரித்தானியா - பிரான்ஸ் - சுவிஸ் - ஒஸ்றியா போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஆபிரிக்க நாடுகளான சிறா லியோன் - பொஸ்ரவனா போன்ற சில நாடுகளும் பிரேரணையின் உள்ளடக்கில் உள்ள சில வார்தைகளில் மாற்றம் வேண்டுமே அன்றி பிரேரணை சரி என்றே கருத்துரைத்திருந்தார்கள்.

இந்த உபமாநாட்டில் முக்கியமாக வாக்களிக்க தகுதியற்ற நாடுகளான சீனா - கியூபா - ரஸ்யா ஆகியன அதிகம் பேசியிருந்தமை கவனிக்க கூடியதாக இருந்தது.

இறுதிவரை இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இந்தியான கருத்து ஏதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தது.

இவ்வாறு இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் நாடுகளது நிலைப்பாட்டினை நாடிபிடித்துப் பார்கும் வகையில் இந்த உப மாநாடு அமைந்திருந்து.

எதிர்வரும் 13-14ல் திகதிகளில் பிரேரணையின் இறுதி வரைவினை அமெரிக்கா சபையில் சமர்பிக்கும் என எதிர்பார்கப்படுவதோடு 21-22ம் திகதிகளில் வாக்கெடுப்புக்கு செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad