புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013


மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை : கலைஞர் கருத்து

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து இன்று செய்தியாளர்களிடம் கலைஞர் பேசியபோது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் :

தி.மு. கழகப் பொருளாளர், மு.க. ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்திருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் இன்று காலையில் 10 மணிக்குத் தான் அதுபற்றி அறிந்தேன். அதன் பிறகு தான் செய்தி பார்த்தேன். அது பற்றிய விளக்கங்கள் ஸ்டாலினால் தரப்பட்டிருக்கின்றது. நடைபெற்றது தவறு என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டவர்களால் கருத்து வெளியிடப் பட்டிருக்கிறது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

நீங்கள் கூட்டணியிலிருந்து விலகிய காரணத்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை என்று இதை நீங்கள் நினைக்கிறீர்களா?

உங்களுடைய கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

 மத்திய அமைச்சர்; நடைபெற்ற சோதனை, தெரியாமல் நடந்தது என்று கூறியிருப்பதை நீங்கள் நம்பத் தயாரா?

மத்திய அமைச்சர் அப்படி சொல்லியிருக்கிற போது நான் நம்ப முடியாது என்று சொல்ல முடியாது.

இது அரசியல் காழ்ப்புணர்வு இல்லை என்று நினைக்கிறீர்களா?

பொதுவாக தி.மு.கழகத்தைச் சுற்றி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமான நடவடிக்கைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் இது ஒன்றாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்பதைப் போலச் சொல்லுகிறீர்கள். கார் வாங்கியது என்பது எப்போதோ நடந்த செயல். அதற்காக நீங்கள் கூட்டணியிலிருந்து விலகிய மறுநாளே சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அதைப் பற்றி பல கட்சித் தலைவர்களும் எதிர்த்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்.

சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரே துணை அமைச்சரிடம் அதற்காக வருத்தம் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?

மத்திய அமைச்சர் இந்தச் சோதனைக்கு ஒப்புதல் தரவில்லை என்பதை அவரே வெளிப்படையாக அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்வது முறையல்ல.

காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால், கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியாவது விலகினால் இது போல பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இதுவும் ஒன்று தானே?

பழி வாங்கும் அரசியல் டெல்லியிலே மாத்திரமல்ல; தமிழ்நாட்டிலும் இருக்கிறது.

ad

ad