புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2013




தமிழ்நாடெங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம், பொதுமக்களும் பங்கேற்பு

இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள்இன்றும் ஆர்ப்பாட்டம்.

தனி ஈழத்தை வலியுறுத்தி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இடிந்தகரையில் 1000பேர் உண்ணாவிரத போராட்டம்

இன்று காலை முதல் மாணவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மாணவர்கள் கடலூரில் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தற்போது 29 பேர் நான்காவது நாளாக தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தில் உள்ளனர். மேலும் 13 நபர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இதில் நான்கு நபர்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து மீண்டும் உண்ணா நிலை போராட்டத்தில் இணைந்துள்ளனர் .

மாணவர்களின் உறுதியை பார்த்து அங்குள்ள 65 வயது பெண்மணி மனோரஞ்சிதம் என்பவர் இப்போது மாணவர்களோடு உண்ணா நிலையில் குதித்துள்ளார் . மாணவர்களின் உறுதியான போராட்டம் பொதுமக்களையும் ஈர்த்துள்ளது .

மதுரையில் மாணவர்கள் ஊர்வலம்.

மாணவர்கள் போராட்டத்தை அடக்க முயன்று தோற்றுப்போனது அரசு, குழப்ப முயன்று குப்புற படுத்தது எதிர்கட்சி.

#சுயநல அரசியல்வாதிகளே, உங்களுக்கு ஆப்பு கூர் தீட்டப்படுகிறது எங்கள் மாணவர்களால்

அரசியல்வாதிகளால் ஏமாந்தது போதும் புதியதோர் விதி செய்வோம் மாணவர்களே ஒன்று திரளுங்கள் ..

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

ad

ad