புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2013




           வதூறு வழக்குகளைப் போட்டு கோர்ட் கோர்ட்டாய் அலைக்கழிக்கும் இலைத் தரப்பிற்கு, பாடம் புகட்ட நினைக்கும் விஜயகாந்த், அந்த நீதிமன்ற பயணங்களை, தொண்டர்களைச் சந்திக்கும் பயணங்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்.nakeeran

27-ந் தேதி காலை 10 மணி யளவில், இலைத்தரப்பு போட்ட அவதூறு வழக்கில் ஆஜராக, தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றத் திற்கு விஜயகாந்த் வந்தபோது கோர்ட் வளாகமே தொண்டர்களால் மூச்சுத் திணறியது. காரணம்  தஞ்சை மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள புதுக்கோட்டை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் இருக்கும் அத்தனை தே.மு.தி.க. கிளைகளுக்கும் செய்தி அனுப்பி, தொண்டர்களை கோர்ட்டுக்கு திரண்டுவரும்படி கட்சித் தலைமை சொன்னதால்தான் இவ்வளவு கூட்டம்.

விஜயகாந்த்தைப் பார்த்த தொண்டர்கள் "கருப்பு எம்.ஜி.ஆர். வாழ்க! பொய்வழக்குப் போட்ட ஜெயலலிதா ஒழிக' என்றெல்லாம் பிராந்தியமே அதிர முழக்கமிட்டனர். நீதிபதி முன் ஆஜராகிவிட்டு வெளியே வந்த விஜயகாந்த், மீடியாக்காரர்களையும் தொண்டர் களையும் பார்த்து ""இனி எந்த வழக்கிலும் நான் வாய்தா வாங்கப் போவதில்லை. கோர்ட் கோர்ட்டாய் ஆஜ ராகப்போறேன்.  போகும்போது மக்களை யும் தொண்டர்களையும் சந்திப்பேன். எத்தனை பொய் வழக்குப்போட்டாலும் நான் அசரமாட்டேன்'' என ஒரு மினி மீட்டிங்கையே நடத்தி முடித்துவிட்டுக் கிளம்பினார்.

இப்படி கோர்ட்டில் ஆஜராகப் போகும் போதெல்லாம் தொண்டர்களை உற்சாகப் படுத்தும் திட்டத்தில் இருக்கிறார் விஜய காந்த். இது ஒரு புறமிருக்க, அவரது மனைவி பிரேமலதாவோ கட்சித் தலைமையகத்தில், தினமும்  எட்டு மாவட்டங்களின் மகளிரணி என்று திட்டம் வகுத்துக்கொண்டு, அவர் களை சந்திக்கிறார். அவ ருடன் கட்சி செயலாளர் பார்த்தசாரதி, இளங்கோ வன், சந்திரகுமார், மக ளிரணி மாநில நிர்வாகி சிவகாமி ஆகியோர் மட்டுமே கலந்துகொள் கிறார்கள். 

மற்றபடி வேறு எந்தக் கட்சிப் புள்ளிக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மகளிரணியினர் கட்டாயமாக கட்சி சேலை அணிந்திருக்க வேண்டும். பேசப்படுகிற விஷயம் வெளியே போகாமல் இருக்க,  உள்ளே வந்ததும் அனைவரும் தங்கள் செல்போன்களை ஆஃப் செய்துவிடவேண்டும். இப்படி ரகசியங்கள் கசியாதபடி பல்வேறு பாதுகாப்பு அரண்களை எழுப்பி இந்த சீக்ரெட் மீட்டிங்குகளை நடத்திக் கொண்டிருக்கிறார் பிரேமலதா.

அந்தக் கூட்டத்தில் அப்படி என்னதான் பேசப்படுகிறது? கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு மகளிரணிப் பிரமுகரிடமே நாம் கேட்டபோது ""முதல்ல கட்சியின் நோக்கம் பற்றியும் கொடியின் பின்னணி பற்றியும் பேசுறாங்க. அதுலேயே நரம்புகள் முறுக்கேறுது. கட்சிக்கு ஏதாவது செய்யணுங்கிற எண்ணம் உண்டாகுது. பிறகு மகளிர் தினமான மார்ச் 8-க்கு நாம் என்ன பண்ணலாம்னு கருத்துக் கேட்கி றாங்க. 

இதில் பலர், மற்ற கட்சிகளைப் போல் நாம் மக்கள் மத்தியில் பிரச்சினைகளைக் கொண்டு போய்ப் போராட்டங்களை நடத்தணும்னு சொல்றாங்க. சிறைக்குப் போகவும் தயங்க மாட்டோம்ன்னு உணர்ச்சி பூர்வமா சொல்றாங்க. இதைகேட்டு பூரித்துப்போகிறார் பிரேமலதா. நாங்க கட்சியில் யாரைப் பற்றியாவது குறை சொன்னா, அதை பிரேமலதா கவனமா நோட் பண்ணிக் கிறாங்க. கூட்டம் முடிஞ்சதும் அவங்களை தனியே கூப்பிட்டு, புகாரை அவங்க கைப்படவே எழுதி வாங்கிக்கறாங்க. 

உதாரணமா டெல்டா மாவட்ட நிர்வாகிகளை  கூட்டினபோது, அதில் திருச்சிப் பகுதியிலிருந்து வந்த லதா என்பவர் எழுந்து, "நான் 25 வருடமா கேப்டனோட ரசிகையா இருக்கேன். இதோ பாருங்க "திருமூர்த்தி' படத்தின்போது அவரோட நான் எடுத்துக்கிட்ட படம்'னு காட்டியபோது பிரேமலதா, "அட எங்கிட்டக்கூட இந்தப்படம் இல்லை'ன்னு வாங்கிப் பார்த்தாங்க. உடனே லதா, "அம்மா, அப்ப உங்களுக்குக் கல்யாணமே ஆகலை'ன்னு சொல்ல, அவங்க "ஆமா'ன்னு தலையாட்டினாங்க. 

பிறகு "உங்க பிரச்சினை என்ன?'ன்னு பிரேமலதா கேட்க, லதாவோ "கட்சி சீனியரெல்லாம் கட்சியை விட்டுப் போய்க்கிட்டே இருக்காங்க. கட்சியில் சீனியரான நான், இன்னும் பகுதித் துணை அமைப்பாளராவே இருக்கேன். ஆனா நேற்று கட்சிக்கு வந்தவங்கள்லாம் மாநகரப் பொறுப்பு உட்பட பெரிய பதவிகளுக்கு வந்துடறாங்க'ன்னு சொன்னாங்க. உடனே மாநில மகளிரணி சிவகாமியைப் பார்த்து, "திருச்சியில் என்னவோ தப்பு நடக்குது'ன்னு சொன்ன பிரேமலதா, "உங்களை விசாரணை கமிட்டி சந்திக்கும். அப்ப முழுசா சொல்லுங்க'ன்னு லதாகிட்ட சொன்னாங்க என்றார் விரிவாகவே.

சரி, பெண்கள் தினமான மார்ச் 8-ல் என்ன செய்யலாம் என்ற கேள்வி, மகளிரணி கூட்டத்தில் வைக்கப்படுவது ஏன்?

""ஆளும்கட்சிக்கு தே.மு.தி.க.வின் பலத்தை நிரூபிக்க, சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கும் மனநிலையில் இருக்கிறார் கேப்டன். இதன் மூலம் இது விசிலடிக்கும் கூட்டம் அல்ல; சிறைக்குப் போகவும் அஞ்சாத சிங்கங்களின் கூட்டம் என்பதை உணர்த்த ஆசைப்படுகிறார். அதோடு தி.மு.க. பல்வேறு போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்திவரும்போது, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் நாம் வெறும் மேடை முழக்கங்களோடு நின்று விடக்கூடாது என்று கருதியே, போராட்ட மூடுக்கு வந்திருக்கிறார் கேப்டன். நாங்கள் யானைக் காதில் புகுந்த வண்டாக, இனி இந்த அராஜக ஆட்சிக்கு குடைச்சல் கொடுக் கப்போகிறோம்'' என்கிறார்கள் தே.மு. தி.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள்.

விஜயகாந்த்தின் அறிவிப்பை பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கும் தொண்டர்கள்.

-ஜெ.டி.ஆர்., பகத்சிங்

ad

ad