புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2013


இலங்கையில் பொது வாக்கெடுப்பு. தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் நிறைவேறியது



இலங்கையில் பொது வாக்கெடுப்பு . தமிழக சட்டசபையில் வரலாற்று தீர்மானம் வெற்றி பெற்றது ! 
லங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.
முதல்வர் வேண்டுகோள்: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் இந்த வராலாற்று சட்டமன்ற தீர்மானம் மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே ஆகும் . ஈழம் அடையும் மாணவர் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து உள்ளனர் . 

ad

ad