புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2013

கனேடியத் தமிழர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடும்படி அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த்தாகவும், கருவிகளை வாங்க முயற்சித்தாகவும் குற்றம்சாட்டி, கனேடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடும் படி, அமெரிக்காவிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தத் தகவலை கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. 

சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற கனேடியத் தமிழர் மீது தீவிரவாத குற்றச்சாட்டின் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்து, சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அசாதாரணமான இந்த வேண்டுகோள் கடிதத்தை அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் சுரேஸ் சிறீஸ்கந்தராஜாவை பிணையில் விடுவிக்கக் கோரும் மனு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடக் கோரி அமெரிக்காவுக்கு சிறிலங்கா எழுதிய கடிதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனினும் இதனை அடிப்படையாக வைத்து சுரேஸ் சிறீஸ்கந்தராஜா சார்பில் கோரப்பட்ட பிணைக்கு நீதிபதி அனுமதி மறுத்து விட்டார்.

வோட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற சுரேஸ், விடுதலைப் புலிகளுக்காக அமெரிக்க வங்கிகள் ஊடாக 13 ஆயிரம் டொலர் நிதி சேகரித்ததாகவும், ரமணன் மயில்வாகனத்துடன் இணைந்து இரவுப்பார்வை கருவிகள், இலத்திரனியல் கருவிகள், நீர்மூழ்கி வடிவமைப்பு மென்பொருள்களை வாங்க முயன்றதாகவும் அமெரிக்க சட்டவாளர்களால் குற்றம்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad