புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013


அமெரிக்க தீர்மானம் மீது முடிவு எடுக்கும் நடவடிக்கைகள் தொடக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூடியுள்ளது. இதில், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது பல்லாயிரக்கண
க்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தின் வரைவு தற்போது உறுப்பு நாடுகளின் பார்வைக்கு சுழற்சியில் விடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதுடன், முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 
ஆனால் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியா இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்தப் பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் 15.03.2013 வெள்ளிக்கிழமை அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் பிற கட்சி எம்.பி.க்கள் பேசினார்கள். 
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருந்ததாவது:-
இலங்கை பிரச்சனையில் உறுப்பினர்கள் கவலையை வெளிப்படுத்தினர். இந்தப் பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது கவலை அளிக்கிறது. தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 
இலங்கையில் வாழ்கிற தமிழ் இன மக்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான் அரசின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அத்தனையையும் மத்திய அரசு எடுக்கும். இலங்கை அரசை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். நியாயமான பங்களிப்பு செய்யப்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டவர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம்.. இதில் இறுதி முடிவு எடுத்தவுடன் அது பற்றி சபைக்கு தெரிவிக்கப்படும்.

ad

ad