புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013

                                          எனது கண்ணீர் அஞ்சலி 
                                                          சசிபாரதி 
                                  முன்னாள் ஈழநாடு ஆசிரியபீடம் 
எண்பதுகளின் ஆரம்பத்தில் நான் ஈழநாடு நிருபராக  இருந்த போது  மதிப்புக்குரிய சசி பாரதி அவர்களை எப்போதாவது காரியாலயத்தில் கண்டு ஓரளவு புன்முறுவல் பழக்கம்  தான் . இருந்தாலும் இவரது எழுத்துக்களை மொண்டிருகிறேன்.பெரும்பாலான காலம் இவர் ஒப்பு நோக்குனராகவும் சஞ்சிகை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.எனது இளமைக் காலத்தில் எல்லா ஞாயிறு பதிப்புகளும் எம்மை கவர்ந்திழுக்கும் .ஆனாலும் ஈழநாடு மட்டுமே கவர்ச்சி இல்லாது சினிமா இல்லாது வண்ணக் கலவைகள் இல்லாது தமிழை மட்டுமே நம்பி வெளிவந்து எங்கள் இளமைபருவத்தை சுண்டி இழுத்த பெருமையை பெற்றது .இந்த பெருமை மிகு ஞாயிறு வாரமலரின் பிரம்மா .சசிபாரதி இவரது காலத்தில் சரிசமமாக உதவி ஆசிரியராக இருந்த  எஸ்.எஸ்.குகநாதன் அவர்களை எனது உயர்ந்த நண்பனாக கிடைத்த பேறு பெற்றாலும் இவரோடு பழகும் காலம்  அரிதாகவே  எட்டியது .யாழ்ப்பான பத்திரிக்கை உலகின் முன்னோடி இன்று எம்மிடையே இல்லை வருந்துகிறேன் உங்களோடு இணைந்து .அஞ்சலிக்கிறேன்
                                    சிவ-சந்திரபாலன் -சுவிட்சர்லாந்து 

ad

ad