புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013

இலங்கைக்கு எதிரான விசாரணையில் சர்வதேச சமூகத்தையும் பங்கெடுக்க அனுமதி கோரும் இந்தியா

தமிழகத்தில் மிகவும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருவதால் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், லோக்சபா தேர்தலி்ல் முட்டை வாங்காமல் தப்பிக்கும் வகையிலும் முக்கியத் திருத்தத்தை தீர்மானத்தில் கொண்டு வந்தாக வேண்டிய நிலையில் மத்திய அரசு இருந்தது.
இந்த நிலையில்தான் சில திருத்தங்களை இந்தியா பரிந்துரைத்துள்ளது. அதில் முக்கியமானதாக கூறப்படுவது, இலங்கைக்கு எதிராக சுயேச்சையான,சுதந்திரமான விசாரணை தேவை. இந்த விசாரணையில் சர்வதேச சமுதாயத்தையும் பங்கெடுக்க வகை செய்ய வேண்டும் என்பதாகும்.
இந்த திருத்தத்தையும் தீர்மானத்துடன் சேர்த்துள்ளது அமெரிக்கா. இதையடுத்து மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் மீ்து விவாதம் தொடங்கியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் ஓட்டெடுப்பு நடைபெறும் .
கடந்த ஆண்டுஅமெரிக்கா கொண்டு வந்த முதல் தீர்மானத்தையும் இந்தியா, கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆதரித்தது. அப்போது தீர்மாஐனத்திற்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன.
அப்போது இந்தியாதான் அமெரிக்காவின் கடுமையான தீர்மானத்தில் திருத்தம் செய்து அதை இலங்கைக்கு சாதகமானதாக மாற்ற உதவியது என்பது நினைவிருக்கலாம். அதாவது இலங்கை சட்ட திட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்று தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்தது இந்தியா. இதன் மூலம் இலங்கைக்கு சாதகமாகநடந்து கொண்டது என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக நேற்று இரவு தீர்மான திருத்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது சிவசங்கர் மேனன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அப்போது திமுகவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில், திமுகவின் கோரிக்கைப்படி, “இனப்படுகொலை’ என்ற வார்த்தையை தீர்மானத்தில் சேர்த்தால், அது இந்தியாவின் வெளியுறவுக் கோரிக்கைக்கு முரண்பாடாக மையும் என்று சொன்னாராம் திலீப்

ad

ad