புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பான காணொளிப் பேழையை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2002இல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திட்ட பின்னர், அரசியல் தீர்வின் மீது விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்
வகையில், கிழக்கு மாகாணப் போராளிகள் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரை அடங்கிய காணொளிப் பேழையே அமெரிக்காவிடம் வழங்கப்பட்டது. 

இது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 2007 மார்ச் 14ஆம் நாள் வொசிங்டனுக்கு அனுப்பிய தகவலில், கூறப்பட்டுள்ளதாவது, 

விடுதலைப் புலிகள் அரசியல் தீர்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எம்மிடம் கூறினார். 

2002இல் போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டு 2 மாதங்களின் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரை ஒன்றின் காணொளிப் பேழை இலங்கை அரசுக்கு அண்மையில் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அந்தக் காணொளியில், கிழக்கு மாகாணம் திரும்பும் போராளிகள் மத்தியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் உரையாற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் பிரபாகரனுக்கு அருகில் கருணா காணப்படுகிறார். 

அந்த உரையில், அமைதி வழியில் தமிழர் தாயகம் என்ற இலக்கை அடைய முடியாது என்பது விடுதலைப் புலிகளக்கு நன்றாகவே தெரியும் என்றும் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

போர்நிறுத்த உடன்பாட்டினால் கிடைத்துள்ள இடைவெளியை மீளஇணையவும், ஆயுதங்களை ஒருங்கிணைக்கவும், ஆட்சேர்ப்புக்கும், மீள்விநியோகங்களுக்கும், தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

இது தொடர்பான காணொளியை அமெரிக்கத் தூதரகத்திடம் வழங்க கோத்தாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad