புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013



எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது:
 உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களிடையே சிம்பு பேச்சு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக
அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இந்நிலையில் நடிகர் சிம்புவும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்ற சிம்பு, அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் என ஆறுதலும் கூறியுள்ளார்.


மாணவர்களிடையே சிம்பு பேசியபோது,  ‘’நானும் ஒரு தமிழ் பையன்தான். எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது என்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். மற்றவர்கள் முன்னாடி பேர் வாங்கணும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை. அந்த பேரை நான் நன்றாக சம்பாதித்து வைத்திருக்கிறேன்.


மாணவர்கள் என்றால் படம் பார்ப்போம், ஜாலியாக இருப்போம், நல்லா சுத்துவோம் என்கிற கருத்துதான் சமுதாயத்தில் இருக்கிறது. ஒரு முக்கியமான விஷயத்துக்கு மாணவர்களாலும் குரல் கொடுக்கமுடியும் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் எல்லாம் இந்த போராட்டத்தில் களமிறங்கியுள்ளது சந்தோஷமாக உள்ளது.


எனவே, நானும் ஒரு தமிழனா இருந்து உங்கள் எல்லோருக்கும் ஆதரவா இருக்கணும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன். ஆகவே, மனதை தளரவிடாதீர்கள். கண்டிப்பா ஒரு நல்ல விஷயம் நடக்கும்னு நினைக்கிறேன். சின்னதா நடக்குற ஒரு விஷயம்தான் நாளைக்கு பெரிசா மாறும். என்னுடைய ஆதரவு உங்களுக்கு என்றைக்குமே உண்டு. தைரியமாக இருங்கள்’’என்று தெரிவித்தார்.

ad

ad