புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2013

உதயன் சொல்லுவது பச்சைப்பொய்; நாங்கள் சொல்வதே உண்மை
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை சொல்வது அப்பட்டமான பொய். அதில் கூறியிருக்கும் செய்தியை நம்ப வேண்டாம் என  காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.


24 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த வலி. வடக்குக் காணிகளை நிரந்தரமாக பறிக்க முடிவு என்ற தலைப்பிலான செய்தி இன்றைய உதயன் நாழிதழில் வெளியாகியுள்ளது. அதில் குறித்த காணிகயை மக்களிடம் கையளிக்காமல் படைத்தரப்பின் தேவைகளுக்காக முற்றுமுழுதாக பிரித்தெடுக்க அரசு அரசு முடிவெடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

காணி,காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட அலுவலகம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் அதிதியாக கலந்து கொண்டு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்.மாவட்டத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பொதுமக்களுக்கு காணி தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன.

நாம் சிங்களவர் தமிழர் என்ற இன மத பாகுபாடு இல்லாது சேவையினை மேற்கொண்டு வருகின்றோம். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நாம் ஏற்கனவே வடக்கு கிழக்கில் முன்னெடுத்துள்ளோம்.

இந்த வருட வரவு செலவு திட்டத்தில் வடமாகாண காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வடக்கில் உள்ள 2இலட்சத்து 50 ஆயிரம் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படவுள்ளன.

எனினும் இங்குள்ள அரசியல்வாதிகளின் தலையீட்டினாலும் காணி சுவீகரிப்பு தொடர்பான வழக்குகளினாலும் நாங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தடைப்பட்டன. தொடர்ந்தும் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

இதேவேளை, இன்று உதயன் பத்திரிகையில் பொதுமக்களது காணிகளை சுவீகரிப்பதாக பிரசுரித்துள்ள செய்தி அப்பட்டமான பொய். ஆனாலும் இதுவரை அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்து 5000 ஏக்கர் நிலப்பகுதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் அபிவிருத்தித் தேவைக்கான காணிகள் எடுக்கப்பட்டு மீதமாக உள்ளகாணிகளில் மேலும் 21ஆயிரத்து 243 ஏக்கர் நிலப்பகுதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

காணி சுவீகரிப்பு தொடர்பிலும் உதயன் செய்தி தொடர்பிலும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க தெரிவிக்கையில்,

உதயன் எப்போதுமே பிரசுரிக்கும் செய்திகள் பொய்யானவை. உயர்பாதுகாப்பு வலையத்தை சேர்நத 5000 ஏக்கர் நிலப்பகுதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டன. மேலும் அவர்களிடம் ஒப்படைக்க இருக்கின்றோம்.

உதயன் கூறுவது போல 24 கிராம சேவையாளர் பிரிவுகள் இல்லை. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியினால் முன்வைக்கப்படும் மீள்குடியேற்றம் தொடர்பிலான எண்ணிக்கையானது முற்றுமுழுதாக பொய். வலி.வடக்கில் மீள்குடியேற்றப்படாது அண்ணளவாக 6224 ஏக்கர் காணி இன்னும் உள்ளது. இதிலும் அரசாங்கத்திற்கு சொந்தமான 3000 ஏக்கறுக்கு மேற்பட்ட காணிகள் உள்ளன என்றார்.

இதேவேளை, அமைச்சர் மற்றும் கட்டளைத் தளபதியின் கருத்தினை அடுத்து உதயன் பத்திரிகை பிரிசுரித்த செய்தி தவறு என்றால் நீங்கள்  கூறிய அரச காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகள் மக்களிடம் கையளிக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கட்டளைத்தளபதி அது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை. கலந்துரையாடலினை அடுத்து அதற்கான பதில் வழங்கப்படும் எனவும் கூறிவிட்டு இத்துடன் முடித்துக் கொள்வோம் என்று வெளியேறிச் சென்றனர்.



ad

ad