புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2013



ஜ.நாவின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்-ஐ.நாவில் ஈழத் தமிழர் மக்களவை மனுக்கையளிப்பு!


 முள்ளிவாய்க்கால் முற்றுகைப்போருக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் இலங்கையில் நடைபெற்ற போர் திட்டமிட்ட இன அழிப்பு என்பதை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஐ.நா.வின் மேற்பார்வையில் ஈழத் தமிழரின் விருப்புகளை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் உள்ளடங்கலாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனிடம் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மனு ஒன்றை கையளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜெனிவா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றி ஜ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் பல்லின மக்கள் முன் உரையாற்றினார்.இந்தக் கூட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கையில் நடந்த இன அழிப்பிற்கு சர்வதேச சுயாதீன விசாரணையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் விரைவுபடுத்தி பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு தீர்வு வழங்க காலம் தாழ்த்தாது விரைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தி அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாக ஐ.நா. செயலாளரின் முன்பாக அவரது பேச்சாளர் மார்டின் நெர்ஸ்கியிடம் மனு கையளிக்கப்பட்டது.இதேவேளை இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்புக் குறித்து விளக்கமளிக்கும் வகையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகத் தமிழர் உரிமை மாநாடு சனிக்கிழமை ஜெனிவா நகரில் ஆரம்பமாகியுள்ளது.
ஏற்கனவே ஐ.நா மனித உரிமைகள் சபையின் 22ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பாமாகியுள்ள நிலையில் இலங்கை அரசு மீதான சர்வதேசத்தின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் முகமாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad