புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2013


மொகாலி டெஸ்டில் இந்திய வீரர்களின் புதிய சாதனை


அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனை இதுநாள்வரை குண்டப்பா விஸ்வநாத் வசம் இருந்தது. 

இவர் ஆஸி. அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் 137 ஓட்டங்களை எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது (1969,70). 

தற்போது இந்த சாதனையை தவான் முறியடித்துள்ளார். மொகாலியில் ஆஸி. அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். 

இந்தப் போட்டியில் இவர் 187 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன் இந்தத் தொடரில் விஜய் மற்றும் தவான் ஜோடி இணைப்பாட்டமாக 289 ஓட்டங்களை விலாசியுள்ளனர். 

இதுவே மொகாலியில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஒட்டங்கள் என்பதோடு, ஆஸி. அணிக்கு எதிராக இந்தியாவின் சிறந்த முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகவும் இது அமைந்துள்ளது. 

தற்போது முதல் இன்னிங்ஸில் துடுப் பெடுத்தாடிவரும் இந்திய அணி சார்பில் முரளி விஜய் 153 ஓட்டங்களையும், தவான் 187 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுக்க இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. 

இதேவேளை இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 37 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் டோனி 4 ஓட்டங்களுடனும், புஜாரா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

ad

ad