புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2013


சென்னையில் உள்ள தமது துணைத் தூதரகத்தை மூடுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தின பாதுகாப்பு ஆலோசகரான மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் றொகான் டயஸ் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டதை அடுத்தே இது
குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் சிறிலங்கா எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர், சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தின பாதுகாப்பு ஆலோசகரான மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் கூட, தனது பணிகளை எந்த தொந்தரவும் இன்றி முன்னெடுப்பதில் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமிழ்நாட்டில் இரு பௌத்த பிக்குகள் தாக்கப்பட விவகாரத்தில் சிறிலங்காவில் எழுந்துள்ள எதிர்ப்பைத் தணிக்கும் வகையில் முன்னணி பௌத்த பிக்குகளை இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ad

ad