புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2013


பின்லேடன் மருமகனை மடக்கிய அமெரிக்க

துருக்கி மீடியாக்களில் நேற்று வெளியான செய்தியின்படி, பின்லேடனின் மருமகனை எப்படியோ மடக்கி அமெரிக்கா கொண்டு சென்றிருக்கிறது சி.ஐ.ஏ. இதுதான் தற்போதைய பரபரப்புச் செய்தி ! பின்லேடன் மருமகன் அபு காயித்,
துருக்கியில் கைது செய்யப்பட்டு ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விபரம் ஏற்க்கனவே வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. அவரை தம்மிடம் ஒப்படைக்கும்படி சி.ஐ.ஏ. வற்புறுத்திவந்த போதிலும், துருக்கி அசைந்து கொடுக்கவில்லை.

சி.ஐ.ஏ.வின் இம்சை தாங்க முடியாமல், அவரை ஜோர்தானுக்கு நாடு கடத்தும் முயற்சியில் இறங்கியது துருக்கி. ஆனால், அதற்குள் ‘எப்படியோ’ இவரை தமது கன்ட்ரோலுக்குள் கொண்டுவந்த சி.ஐ.ஏ., உடனடியாக அமெரிக்காவுக்கு கொண்டு சென்றிருப்பதாக, துருக்கி மீடியா அலறுகிறது. அது எப்படி சாத்தியம் ? இதிலுள்ள பின்னணி விவகாரம் என்னவென்றால், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி துருக்கிக்கு விஜயம் செய்யவிருந்த நேரத்தில், பின்லேடனின் மருமகனை தமது காவலில் வைத்திருக்க விரும்பவில்லை துருக்கி. அவரை தம்மிடம் ஒப்படைக்கும்படி ஜான் கெர்ரி அழுத்தம் கொடுத்தால் மறுக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.

இதனால், ஜான் கெர்ரி அங்காராவுக்கு வருவதற்கு முன்னரே பின்லேடன் மருமகன் அபு காயித்தை ஜோர்தானுக்கு நாடு கடத்தினால், ஜோர்தான் அவரை குவைத்துக்கு (அவரது சொந்த நாடு) நாடு கடத்தும் என்று திட்டமிட்டது துருக்கி. உளவு வட்டார தகவல்களின்படி, இம்மாதம் (மார்ச்) 1-ம் தேதி, அபு காயித்தை அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் இருந்து அங்காரா விமான நிலையத்துக்கு காதும் காதும் வைத்ததுபோல அழைத்துச் சென்றார்கள். அங்காராவில் இருந்து விமானம் மூலம் இஸ்தான்புல் கொண்டு சென்று அங்கிருந்து ஜோர்தானின் அமான் அலீயா விமான நிலையத்துக்கு கொண்டு செல்வதே திட்டம். அங்காரா விமான நிலையத்தில் விமானம் ஏற்றியிருக்கிறார்கள். ஆனால், இஸ்தான்புல்லில் விமானம் மாறி, அமான் செல்லும் விமானத்துக்குள் ஏற்றப்படுவதற்கு முன்னரோ, அல்லது, அமானில் தரையிறங்கிய பின்னரோ, அவரை ‘எப்படியோ’ தமது கன்ட்ரோலுக்குள் கொண்டுவந்த சி.ஐ.ஏ., தமது பிரத்தியேக விமானம் ஒன்றில் ஏற்றிக்கொண்டு, பறந்து விட்டது.

இதை எப்படிச் செய்தார்கள் என்பதெல்லாம், கேட்கக்கூடாத கேள்விகள்.

ஆரம்பத்தில் பின்லேடன் மருமகன் அபு காயித்தை தம்மிடம் ஒப்படைக்கும்படி துருக்கி அரசிடம் கோரிக்கை விடுத்தபோது, சொல்லப்பட்ட காரணம், செப்டெம்பர் 11 தாக்குதல் தொடர்பாக அவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என்பதுதான் (அந்த தாக்குதல் நடந்தபோது, பின்லேடனின் மகளை திருமணம் செய்திருந்த இந்த அபு காயித், அல்-காய்தாவின் பிரதான செய்தி தொடர்பாளராக இருந்தார்). இப்போது, சி.ஐ.ஏ. இவரை ‘எப்படியோ’ கொண்டு சென்றது தொடர்பாக அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மீடியாக்களிடம் இருந்து கேள்வி மேல் கேள்வியாக வரவே, அதற்கு பதில் கூறும் விதத்தில் தூதரகம் விடுத்த செய்திக் குறிப்பில், “அப்படி ஒரு ரிப்போர்ட் இருப்பதாக நாமும் கேள்விப்பட்டோம்” என்று ஒரு வரி பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்லேடனின் மருமகன் அமெரிக்கா வந்து இறங்கியது, இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி இவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

ad

ad