புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013



        ""ஹலோ தலைவரே... தமிழ்நாடே போர்க்கோலம் பூண்டமாதிரி இருக்குது.. மாணவர்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணின்னு இலங்கைக்கும் அதன் அதிபர் ராஜபக்சேவுக்கும் எதிரா கொந்தளிச்சிக்கிட்டிருக்காங்க. ஐ.நாவில்nakkeran  இந்தியாவே தீர்மானம் கொண்டு வரணும்னும், இலங்கை மீது போர்க்குற்ற- இனப்படுகொலை- பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுக்கணும்னும் வலியுறுத்தி உணர்வு ரீதியான போராட்டங்களை நடத்திக்கிட்டிருக்காங்களே..''

""தமிழகம் இப்படிக் கொந்தளிக்கிற நிலையில், சோனியாவின் வழிகாட்டுதலில் நடைபெறும் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகுதாம்?''

""அதைத்தான் நம்ம நக்கீரன் போனமுறையே சொல்லியிருந்ததுங்களே தலைவரே.. ஐ.நாவில்  அமெரிக்கா  கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கலைன்னா, மத்திய அமைச்சரவையிலிருந்து  தி.மு.க வெளியேறுவதுங்கிற முடிவை கலைஞர் எடுத்திருப்பது பற்றி விரிவா  எழுதியிருந்ததே.. உளவுத்துறை மூலமா இந்த விவரம், டெல்லிக்கும் போயிடிச்சி. வியாழக் கிழமையன்னைக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும், தமிழக காங்கிரஸ் எம்.பிக்களுக்கு சோனியாகிட்டேயிருந்து ஓர் உத்தரவு வந்திருக்குது. அதாவது, இந்த சனிக்கிழமை யாரும் உங்க ஊருக்குப் போகவேணாம். டெல்லியிலேயே இருங்கன்னு சொல்லப்பட்டதாம். தி.மு.க. எடுத்திருக்கும் முடிவு பற்றியும் தமிழக அரசியல்  நிலவரம் பற்றியும் விவாதிப் பதற்காகத்தான் காங்கிரஸ் எம்.பிக்களை வெயிட் பண்ணச் சொன்னாராம் சோனியா.''

""ஈழப்பிரச்சினையில் தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் என்ன நினைக் கிறாங்க?''

""அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆத ரிக்கணும்ங்கிறதுதான் அவங்களோட நிலை. டெல்லியில், தி.மு.க எம்.பிக் கள்கிட்டே காங்கிரஸ் எம்.பிக்கள் பேசு னப்ப, தி.மு.க தலைமையின் முடிவு என் னன்னு தெரிஞ்சுப் போயிடிச்சாம். இப்போ தைய நிலையில், அ.தி.மு.கவோடு காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பில்லை. அதனால, தி.மு.க தயவை நம்பித்தான் எம்.பி தேர்தலை சந்திக்கணும்னும், காங்கிரஸ் மீதான தி.மு.கவின் கோபமும் தமிழக மக்களின் கோபமும் தணியணும்னா அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கணும்ங்கிறது தான் தமிழக காங்கிரஸ் எம்.பிக்களோட நிலை. அதைத்தான் அவங்க சோனியாவை சந்திக்கும்போது விரிவா சொல்லணும்னு இருக்காங்களாம்.'' 


""தி.மு.க.வின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் இதுவரை உறுதியாகத்தானே இருக்குது?''

""ஈழப்பிரச்சினையோடு இன்னொரு விவகாரத்திலும் காங்கிரஸ் மேலே தி.மு.க படுடென்ஷனா இருக்குதுங்க தலைவரே... 2ஜி வழக்கை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலா ஸ்பெஷல் கோர்ட்டில் வியாழக் கிழமையன்னைக்கு டெலிகாம் வாட்ச்டாக் என்ற அமைப்பின்  சார்பில் ஒரு பெட்டிஷன் தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பெட்டிஷனில் என்ன சொல்லப்பட்டிருக்குன்னா, 2003-04 காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை 6.2 மெகாஹெட்சுக்கு மேலே அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் வாரிக் கொடுத் தார். அதை அனுபவித்தவர்கள் ஏர்டெல் நிறுவன அதிபர் சுனில் மிட்டலும் வோடோ ஃபோன்  நிறுவனமும்தான். இந்த முறைகேடு சம்பந்தமா எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. ஆனால் சார்ஜ்ஷீட்டில் நிறுவன அதிபர் பெயரைக் குறிப்பிடாமல் வெறுமனே கம்பெனி, செயலாளர் என்று மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது.''

""அப்படின்னா கம்பெனின்னா என்ன? வெறும் கட்டிடமா?''

""அதைப் பற்றித்தான் அந்த வாட்ச்டாக் அமைப்பு கேள்வி எழுப்பியிருக்கு. சுனில் மிட்டல் மீது ஏன் சார்ஜ் ஷீட் போடலைங்கிறதுக்காகத் தான் இந்த பெட்டிஷன். இந்த முறைகேடு சம்பந்தமா விசாரித்த சி.பி.ஐ.யின் எஸ்.பி. லெவலிலான விசாரணை அதிகாரியும் அவருக்கு மேலே உள்ளவரான டி.ஐ.ஜி.யும் இந்த  வழக்கில் சுனில் மிட்டல்தான் ஏ-1 அக்யூஸ்ட்டுன்னும் குறிப்பே எழுதியிருக்காங்க. ஆனா, சி.பி.ஐ.யின் டைரக்டரா அப்ப இருந்தவரோ சுனில் மிட்டலை சேர்க்க வேண்டாம்னு எழுதிட்டாராம்.''

""ஏன்?''

""முறைகேடு நடந்தது பா.ஜ.க ஆட்சியில். விசாரணை தீவிரமானது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில். பிரதமர் அலுவலகத் தலையீட்டாலதான் ஏர்டெல்  சுனில் மிட்டலோட பேரு சேர்க்கப்படலைன்னு டெலி காம் வாட்ச்டாக் குறிப்பிடுது. இந்த விவகாரத்தில் தான் தி.மு.க தரப்பின் டென்ஷன் எக்கச்சக்க மாகியிருக்கு. 2ஜி ஒதுக்கீட்டால் கலைஞர் டி.வி பயன்பெற்றதுன்னு சொல்லி கலைஞரின் மகளான கனிமொழியையும் கலைஞர் டி.வி. நிர்வாகி சரத்தையும் சி.பி.ஐ. கைது செய்து சிறையில்  அடைத்தது. தி.மு.கவின் கொ.ப.செ.வான ஆ.ராசாவை அதற்கு முன்பே கைது செய்து சிறைப்படுத்தியது. ஆனால், தொழிலதிபரான சுனில் மிட்டல் மேலே சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் அலுவலகமே தலையிட்டுள்ளது. ஆக, 2ஜி விவகாரத்தில் திட்டமிட்டே தி.மு.க மீது பழியைப் போட காங்கிரஸ் கட்சி செயல்பட்டுக்கிட்டிருக்குங்கிறதுதான் டென்ஷன் எக்கச்சக்கமானதற்கு காரணம்.''

""ஜே.பி.சியில் நேரடி சாட்சியமளிக்கணும்ங்கிற ஆ.ராசாவின் கோரிக்கையைக்கூட ஜே.பி. சி. தலைவர் பி.சி.சாக்கோ ஏற்றுக் கலையே?''

""ஆமாங்க தலைவரே.. 4 கேள்விகளுக்கு மட்டும் எழுத்துப்பூர்வமா பதிலளிக்க ஆ.ராசா அனுமதிக்கப்படுவாருன்னு சாக்கோ சொல்லிட் டாரு. ராசா இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை யில் இல்லை. கலைஞரும் ராசாகிட்டே, நேரில் சாட்சியமளிக்க வாய்ப்பளித்தால் ஆஜராகலாம். எழுத்துப்பூர்வமான பதில்களுக்கு அவசியமில்லை. நாம சட்டரீதியாகவே இந்தப் பிரச்சினையை சந்திக்கலாம்னு சொல்லிட்டாராம். 2ஜி, இலங்கை விவகாரம் இரண்டும் சேர்ந்து தி.மு.கவை  காங்கிரசுக்கு எதிரான நிலையில் நிறுத்தியிருக்குது.''

""இலங்கைத்  தமிழர் நலனுக்கானப் போராட்டங்கள் தமிழகம் முழுக்க தீவிரமடைஞ்சிக் கிட்டிருக்கு. மாநிலத்தை ஆளுகின்ற அ.தி.மு.க அரசாங்கத்தோட நிலைப்பாடு என்னன்னு தெரியலை. மந்திரிகள் வட்டாரத்தில் என்ன  சொல்றாங்கப்பா?''

""போராட்டம்  நடத்துற மாணவர்கள் மேலே சரமாரியா நடவடிக்கை எடுக்கப் படுவதால  அரசு அதிகாரிகள் வட் டாரத்தில் இது பற்றிக் கேட்டேங்க தலைவரே.. இத்தகையப்  போராட் டங்கள் அரசாங்கத்திற்கு நல்ல தல்லன்னு ஆட்சித்தலைமை நினைப்பதா அதிகாரிகள்  சொன்னாங்க. இது சட்டம்- ஒழுங்கு சிக்கலை மட்டும் கிளப்பலை. அதற்குமேலே, அரசியல்ரீதியாகவும் ஆளுந்தரப்புக்கு சரியாக இருக்காதுன்னு மேலிடம் நினைக்குதாம். மந்திரிகள் வட்டாரத்தில் பேசுனேங்க தலைவரே..  அவங்களுக்கு இந்தப் போராட்டம் பற்றியெல்லாம் பெரிய  அக்கறை யில்லை. அவங்க வேறொரு விஷயம் தொடர்பா பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருக்காங்க.''

""பட்டிமன்றமா?''

""ஆமாங்க தலைவரே..  .. சின்னம்மாவின் அதிகாரபலம் மறுபடியும் உயர்ந்திருக்கிறதா இல்லையாங்கிறதுதான் பட்டி மன்றத் தலைப்பு. காலையில்  சிறுதாவூரிலிருந்து ஜெ.வும் சசிகலாவும் கிளம்பி, போயஸ்கார்டனுக்கு வந்திடுறாங்களாம். கார்டனிலிருந்து கோட்டைக்கு ஜெ. போனதும், அவருக்கு உணவு தயாரிக்கும் வேலைகளை யும், போயஸ் தோட்டத்தில் வளர்க்கப்படும் மூலிகைச் செடி களின் பரா மரிப்பையும் சசிகலாதான் மேற்பார்வையிடு றாராம்.  அந்த நேரத்தில் சசிகலா அக்கா மகன் டி.டி.வி.தினகரனோட மனைவி அனுராதாவும் கார்டனுக்கு வந்துவிடுகிறா ராம். அதோடு, சசிகலாவின் கணவர் எம்.நடராஜனோட தம்பி ராமச்சந்திரனும் கார்டனுக்கு விசிட் அடித்துவிட்டுப் போகி றாராம். புதுசா பதவியேற்ற 3 மந்திரிகள்கூட ராமச்சந்திரனை  நேரில்  பார்த்து ஆசி வாங்கியிருப்பதா தகவல். இதையெல்லாம் வைத்துதான் கார்டனில் சின்னம்மாவின் அதிகாரம் ஓங்கியிருக்குதா இல்லையான்னு பட்டிமன்றம் நடந்துக்கிட்டிருக்குது.''

""தே.மு.தி.கவில் பிரேமலதா கைதான் ஓங்கியிருக்குது போல,… போராட்டங்களை முன்னின்று நடத்துறாரே?''

""பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்தும் அதற்குக் காரணமான  மதுவிற்பனை யைத் தடை செய்யக்  கோரியும் தே.மு.தி.க அறிவித்த போராட்டத்தை சென்னையில் முன்னின்று நடத்தியவர் பிரேமலதா. அதில் அவர் பேசுறப்ப,  கட்சியிலிருந்து பிரிந்து போன 5 எம்.எல்.ஏக்களை உதிர்ந்த ரோமங் களுக்கு சமம்னு ஒப்பிட்டார். தமிழக அர சியலில் இந்த வார்த்தை  ரொம்ப பிரபலம். ஏன்னா, 1988-89வாக்கில் ஜெ. அணியி லிருந்து நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு இந்த  4 சீனியர்களும் விலகுனப்ப இதே வார்த்தையைத்தான் ஜெ. சொன்னார். இப்ப அதே வார்த்தையை பிரேமலதா சொல்லியிருக்கிறார். அதற் கொரு காரணம் இருக்குன்னும் சொல்றாங்க.''

""என்ன காரணம்?''

""அதை நான்  சொல்றேன்.. .. சென்னை யில் தே.மு.தி.கவின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க வேண்டியவர் பண்ருட்டியார் தான். அவர் வரலை. அதை மனதில் வைத்து தான் ஜெ. பயன்படுத்திய வார்த்தையை பிரேம லதா பயன்படுத்தியிருக்காருன்னு தே.மு.தி.க வட்டாரத்தில் சொல்றாங்க. நான் ஏற்கனவே சொன்னபடி, தி.மு.கவோடு தே.மு.தி.க கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க பக்கம் போவதுங்கிற எண்ணத்தில்தான் பண்ருட்டி  ராமச்சந்திரன் இருக்காராம்.''

ad

ad