புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013

 ழத்தமிழர் நலனுக்கான ஐ.நா.மனித உரிமை ஆணையத்  தீர்மானம் மீதான இந்தியாவின் நிலைப் பாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் ரொம்பவும் கோப மாக இருப்பதையும், இந்த விஷயத்தில் உறுதியான ஆதரவு நிலையையும் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் நிலையையும் இந்தியா எடுக்காவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க வெளியேறு வது என்ற முடிவை கலைஞர் எடுக்கவிருக்கிறார் என் பதையும் இந்த விவகாரம் தொடங்கியது முதலே நக்கீர னில் பதிவு செய்து வருகிறோம். தி.மு.க.வின் நிலையை, கலைஞர்
வெளிப்படையாக அறிவித்ததையடுத்து, டெல்லியும் இது பற்றி ஆலோசிக்கத் தொடங்கியுள்ள நிலையில், என்ன நடந்தது-நடக்கிறது என்பது பற்றி முழுமையாக விசாரிக்கத் தொடங்கினோம்.

மார்ச் 15 (வெள்ளிக்கிழமை)

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்தும் அந்தப் படுகொலைக்குக் காரணமான  போர்க்குற்ற வாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திர மான சர்வதேச விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக் காவின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை  எந்த அய்யப்பாட்டிற்கும்  இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்து கிறோம். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில் மத்திய அரசின் அமைச்சரவையில் தி.மு.க நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகிவிடும் -இப்படி ஒரு அறிக்கை கலைஞரிடமிருந்து வெளியானது

தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் -குறிப்பாக, ஈழப்பிரச்சினையின் அத்தா ரிட்டிகளாக தங்களை நினைத்துக்கொள் ளும் தலைவர்கள் இது  கலைஞரின் வழக்க மான ஸ்டண்ட் என்றே விமர்சித்தனர். ஆனால், மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் மூலம் இந்த அறிக்கையை சீரியஸாகவே கவனிக்கத் தொடங்கியது டெல்லி காங்கிரஸ் மேலிடம். சோனியா, பிர தமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், அகமது பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்ற காங்கிர சின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடியது. 

கலைஞரின் அறிக்கை, தமிழக மாண வர்களின் எழுச்சிப் போராட்டம், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது செய் யப்பட்ட இத்தாலி  கடற்படை  வீரர்கள் இந்தியா திரும்பாதது இந்த 4 விவகாரங் களும்தான் காங்கிரஸ் உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்பட்டது. ""கலைஞரின் அறிக்கை யை நாம் எப்படி ஹேண்டில் செய்யப் போகிறோம்'' என்று சோனியா கேட்க, ""எனக்கு கிடைத்த உளவுத்துறை ரிப்போர்ட்படி, இந்த விஷயத்தில் கருணாநிதிஜி உறுதியாக இருக்கிறார்னு சொல்லப்பட்டிருக்கு'' என்ற பிரதமர் மன்மோகன்சிங், ""எந்த சமாதானத்திற்கும் இடமில்லாத அளவில் அவருடைய முடிவு இருப்பதாக அறிகிறேன்'' என்று மெல்லிய குரலில் தெரிவித்திருக்கிறார். 

சோனியா உடனே, ""அதனால்தான் இந்த விஷயத்தை இங்கே  சீரியஸா டிஸ்கஸ் பண்ணணும்னு நினைக்கிறேன்'' என்றபடி, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார். அவரோ, ""அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பதில்  நமக்கு எந்த இஷ்யூவும் இல்லை. அதை நாம் ஆதரிப் போம். ஆனால்,  அந்தத் தீர்மானத்தில்  இந்தியா திருத்தங் களைக் கொண்டு வரவேண்டும் என்கிறார்  கலைஞர். அதை எப்படி இந்தியா  செய்ய முடியும்? அதற்கு வாய்ப்பேயில்லை. இதற்காக, அமைச்சரவையிலிருந்து தி.மு.க வெளியேறினா லும் பிரச்சினைகளின் அடிப்படையில் நமது  அரசுக்கு கலைஞரின் ஆதரவு கிடைக்கும். அதனால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. கூட்டணி தொடர்பாக தேர்தல் நெருங்கும் போது முடிவெடுப்பதுதான் கலைஞரின் வழக்கம்'' என்று விளக்கினார்.

தமிழகத்தைச் சேர்ந்த ப.சி.க்கு லோக்கல் அரசியல் நிலவரங்கள் நன்றாகவே தெரியும் என நம்பிய டெல்லி  காங்கிரஸ் உயர்மட்டக்குழுவின் மற்ற உறுப்பினர்களும் இதை நம்பினர். திருத்தங் கள் ஏதுமின்றி அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதென்றும் அதன்மூலம் கலைஞரை சமாதானப்படுத்தி, தி.மு.க.வின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் மேலிடம் வந்தது.

மார்ச்-16 (சனிக்கிழமை)

காலையிலேயே பரபரப்பான ஆலோசனை களைத் தொடங்கிவிட்டார் கலைஞர். முதலில் சந்தித்த வர்கள் தி.க. தலைவர் கி.வீரமணியும், திராவிட இயக்கத்  தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீயும்தான். ""காங்கிரஸ் நம்மை ஏமாற்றப் பார்க்கிறது. தமிழர்களின்  உணர்வை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவே யில்லை. நீங்க உங்க முடிவில் உறுதியா இருக்கணும். அதுதான் அரசியல் ரீதியாகவும் நல்லது'' என்று சொன்னார்கள். அவர்கள் சென்ற பின்னர், கட்சியின் சீனியர்களுடன் கலைஞர் ஆலோசனை நடத்தினார்.

பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், கனிமொழி, தயாநிதி மாறன் இவர்களுடன் கலைஞரின் அருகிலேயே இருப்பவர்களான ஆ.ராசா,  பொன்முடி, எ.வ.வேலு  ஆகியோர் இந்த ஆலோசனையின்போது உடனிருந்தார்கள். பேராசிரியர்தான் தன் கருத்தை முதலில் சொன்னார். ""காங்கிரசை நம்பிப் போய்க் கொண்டிருப்பது சரியாக இருக்காது என்பதை நான் ஏற்கனவே உங்ககிட்டே நேரடியா சொல்லிட்டேன்'' என்றார். இந்த விஷயத்தில், தி.மு.க. சீனியர்களிடையே இருவித கருத்துகள் வெளிப்பட ஆரம்பித்தன.

கனிமொழி, தயாநிதிமாறன், பழனிமாணிக்கம் மூவரும், ""இலங் கைத் தமிழர்களை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. ஆனால், மத்தியில் மீண்டும் ஐக்கிய முற் போக்கு கூட்டணிதான் மூன்றா வது  முறையாக ஆட்சி அமைக் கும், அதற்கான சூழல்தான் இப்போது நிலவுகிறது. இந்த  நேரத்தில், காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து நாம் வெளியேறுவ தென்பது ஜெ.வுக்கு சாதகமான தாக அமைந்துவிடும். 2ஜி விவ காரத்தில் மேலும் சிக்கல்கள் அதிகரித்து, கலைஞர் டி.வி.க்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும். சி.பி.ஐ. விசாரணையோடு அம லாக்கப்பிரிவின் விசாரணையும் தீவிரமாகியிருக்கிற நேரம். அதனால்  இதையெல்லாம் யோசித்து, காங்கிரஸ் கூட்டணி பற்றி முடி வெடுக்கலாம்'' என்றவர்கள், "தலைவர் என்ன முடிவெடுத்தா லும்  ஏற்றுக்கொள்கிறோம்' என்று முத்தாய்ப்பு வைத்தார்கள்.


டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு தரப்பில் உறுதியான காங்கிரஸ் எதிர்ப்பு வெளிப்படத்  தொடங்கியது. ""காங்கிரஸ் மீது நம் கட்சித் தொண்டர்களே கடும் கோபத்தில்  இருக்கிறார்கள். மாணவர்கள், பொதுமக்கள் கோபமும் அதி கரித்துக்கொண்டே போகிறது. இதையெல்லாம் தாண்டி, ஈழத் தமிழர் நலனுக்கானப் போராட் டத்தில் தலைவரின் வரலாறு நீண்ட வரலாறு. அதில் களங்கம் ஏற்பட இடம்கொடுத்துவிடக் கூடாது. இப்போது நாம் எடுத் துள்ள நிலையில், காங்கிரசுடன் எவ்வித சமரசமும் கூடவே  கூடாது. 2ஜி விவகாரத்தையெல் லாம் சட்டரீதியாகவே பார்த்துக் கொள்ளலாம். 

ஏர்டெல் சுனில் மிட்டலை ஏ-1ஆக சேர்க்கவேண்டும் என்று சி.பி.ஐ. விசாரணை  அதிகாரிகள் சொல்லியும்கூட அவர்களை பிரதமர் அலுவலகம் காப்பாற்றியிருக்கிறது. ஆனால், கூட்டணிக் கட்சியான தி.மு.க.வை இந்த விவகாரத்தில் வசமாக சிக்கவைத்து வேடிக்கைப் பார்த்தது. 2ஜிக்காக காங்கிரசோடு சமாதானம் என்றால் அது தலை வரின்  பெயருக்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு  நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது. நாம் எல்லாவற்றையும்  எதிர்கொள்ளலாம். காங்கிரஸ் உறவு இனி வேண்டாம்'' என்றார்கள் அழுத்தமான  குரலில்.

கட்சியின்  பொருளாளரான மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சராக மு.க.அழகிரி இருப்பதால் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று சொன்னால் அது தன் சொந்த விருப்பம்போல வெளிப்படும் என்ற தயக்கத்தில் நீண்டநேரம் அமைதியாகவே இருந்திருக்கிறார். கடைசியில் கலைஞரை நெருங்கி, ""காங்கிரசால் தமிழகத்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஒரு எதிர்க்கட்சி போலத்தான் நம்மை நடத்துறாங்க'' என தன் மனதில் உள்ளதை போட்டு உடைத்துவிட்டார். கூட்டணி தொடர்பாக நடந்த இந்த விவாதங்கள் எதுவும் மத்திய அமைச்சரான மு.க.அழகிரிக்குத் தெரியாது.

விவாதத்தில் வெளிப்பட்ட  கருத்துகள் அனைத்தையும் கேட்டுக்கொண்ட கலைஞர், ""2ஜி-யிலும் கலைஞர் டி.வி. விவ காரத்திலும்தான் எல்லாத்தையும் செய்துட்டாங்களே... இன்னும் என்ன செய்துடப்போறாங்க? அதையெல்லாம் சட்டரீதியா பார்த்துக்கலாம். கூட்டணி இல்லாவிட்டாலும் தமிழக  மக்கள் அரசியல்ரீதியா தி.மு.க.வுக்கு வாக்களிப்பாங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்குது. ஆனா, காங்கிரஸ் மேலேதான் எனக்கு நம்பிக்கை இல்லை. யுத்தத்தை நிறுத்த ஏற்பாடு செய்துவிட்டதா பிரணாப்முகர்ஜியும், ப.சிதம்பரமும் என்னை  நம்பவச்சி ஏமாத்திட்டாங்க. இனியும் அவங்களை நம்பிக்கிட்டிருக்க முடியாது'' என்றார். உடனே, பிரதமருக்கும் சோனியாவுக்கும் தி.மு.க.வின் வலியுறுத்தலை ஃபேக்ஸ் அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டு, அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா கொண்டு வரவேண்டிய திருத்தங்களை முன்வைத்து ஃபேக்ஸ் அனுப்பப்பட்டது. பத்திரிகையாளர்களை மறுநாள் சந்திக்கலாம் என்றும் கலைஞர் முடிவெடுத்தார்.

மார்ச் 17 (ஞாயிற்றுக்கிழமை)

பத்திரிகையாளர்களை  சந்தித்தார் கலைஞர். தீர்மானத்தில் தி.மு.க கோரும் திருத்தத்தையும் அதுபற்றி ஃபேக்ஸ் அனுப்பப் பட்டிருப்பதையும் படித்துக்காட்டிய  கலைஞ ரிடம், ""உங்கள் கோரிக்கையை ஏற்கவில்லையென் றால், மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில்லை என்று ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவு உடனடி யாக  செயல்படுத்தப்படுமா?'' என்று பத்திரிகை யாளர்கள்  கேட்டனர். கலைஞர் உடனே, ""எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லையென்றால், எங்க ளுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்-நீடிக்காது என்பது உறுதி'' என பதிலளித்தார். தீர்மானத்தில் மாற்றங்கள் என்பது சீரியஸான விஷயம் என்பதையும் கலைஞர் சுட்டிக்காட்டினார்.

கூட்டணியிலிருந்தே விலகல் என்ற கலைஞ ரின் அறிவிப்பும் அவர் அனுப்பிய ஃபேக்ஸ் கடித மும் டெல்லி காங்கிரஸ் தலைமையை மீண்டும் அவசர ஆலோசனைக்குட்படுத்தின. ப.சி.யும் அழைக்கப்பட்டார். முதல்நாள், தமிழகம் வந்திருந்த ப.சி., சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அமெரிக்க தீர்மானம் தொடர்பாக நல்ல செய்தி வரும் என்று மட்டும் சொல்லியிருந்தார். திருத்தம் குறித்து எதுவும் சொல்லவில்லை. கூட்டணிக்கு செக் வைக்கும் விதத்தில் கலைஞர் பேட்டியளிப் பார் என்றும் ப.சி. எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியுடன்தான் அவர் டெல்லி கிளம்பினார். 

கலைஞர் தன் மகன் அழகிரி மத்திய அமைச்சராக இருப்பதால் சீரியஸான மூவ் எதையும் எடுக்கமாட்டார் என்றும், 2ஜி விவகாரம் பற்றியும் அவர் யோசித்தே செயல்படுவார் என்றும் ப.சி. உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நம்பி யிருந்தனர். அத்துடன், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், பொதுக்குழு கூட்டி எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வை கனிமொழி மூலம் சோனியா சமாதானப்படுத்தியதுபோல இதிலும் சமாதானப் படுத்திவிடலாம் என்றே காங்கிரஸ் நினைத்திருந் தது. கலைஞரின் அடுத்தடுத்த அறிவிப்புகள், காங்கிரஸ் தலைமையை நெருக்கடிக்குள்ளாக்கியது.

தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்கள், மக்களின் மனநிலை எல்லாமே காங்கிரசுக்கு எதிரான பேரலை யாக உருவாகிக் கொண்டிருப்பதால், தி.மு.க.வும் கூட்டணியிலிருந்து விலகி விட்டால் எம்.பி. தேர்தலில் தமி ழகத்தில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்பதுதான் காங்கிரஸ் தலைமையின் கவலை. எனவே, கலைஞரின் பேட்டி மற்றும் ஃபேக்ஸ் பற்றி தீவிரமாக  டிஸ்கஸ் நடந்தது. குலாம் நபி ஆசாத்தை சமாதானத்திற்கு அனுப்பிவைக்க லாம் என்ற கருத்து முன்வைக்கப்பட, சோனியா அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்.

"ஆசாத் மட்டும் சென்றால் சரியாக இருக்காது. அவருடன் ப.சிதம்பரமும் ஏ.கே.ஆண்டனியும் சென்னைக்குப் போய் கலைஞரிடம் பேசட்டும்' என்றிருக்கிறார் சோனியா. இதனிடையே, தயாநிதி மாறன் தரப்பிலிருந்தும் டெல்லியைத் தொடர்பு கொண்டு, ""தலைவரிடம் பேசுங்க.. அவர்  சொல்வதையொட்டி, தீர்மானம் தொடர்பாக முடிவெடுங்கள்'' என்று சொல்லப்பட, ""எங்கள் தலைமையும் கருணாநிதிஜியிடம் பேசச்  சொல்லியிருக்கிறது. இன்றைக்கே உங்கள் தலைவரின் அப்பாயிண்ட்மெண்ட்  கிடைத் தால் சரியாக இருக்கும்'' என்றிருக்கிறார்கள். இந்த விவரம் கோபாலபுரத்தை எட்ட, கலைஞருக்குத் தொண்டை சரியில்லை, உடல்நிலை சரியில்லை என்பதைச் சொல்லி யிருக்கிறார்கள். இருந்தும் டெல்லியிலிருந்து இரண்டு, மூன்று முறை போன் வந்தபடியே இருக்க, திங்கட்கிழமை மாலை சந்திப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் தரப்பட்டது.

மார்ச் 18 (திங்கட்கிழமை)

ஈரோட்டில் முதல்நாள்  பொதுக்கூட்டம் முடித்துவிட்டுத் திரும்பிய மு.க.ஸ்டாலின், திங்கள் காலையில் கலைஞரை சந்தித்தார். ""அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் என்ற கோரிக்கையையும் அதை நிறைவேற்றா விட்டால் தி.மு.க. எடுக்கவுள்ள முடிவையும் பற்றிய உங்களின் அறிக்கையை நேற்று பொதுக்கூட்டத்தில் எடுத்துச்  சொல்லி பேசினேன். பலமான  வரவேற்பு. நம் கட்சித் தொண்டர்களின் மனநிலை என்ன என்பது புரிந்தது'' என்று சொல்ல, கலைஞரை சந்தித்த டி.ஆர்.பாலுவும் காங்கிரசுக்கு எதிராகத் தி.மு.க தொண்டர்களின் மனநிலை இருப்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

திங்கள் மதியம் கலைஞரை சந்தித்த தயாநிதி மாறன், "தாத்தா.. நீங்க சொன்ன திருத்தங்களுக்கேற்றபடி சில வார்த்தைகளை சேர்க்க இந்தியா வலியுறுத்தும். அதை ஏற்றுக்குங்க. எப்படியும் இந்தப் பிரச்சினை 2 மாதம்தான் நீடிக்கும். அப்புறம் பிரச்சினை இருக்காது' என்று சொல்லியிருக்கிறார். கலை ஞர் பெரிதாக ரியாக்ஷன் எதுவும் காட்டாமல், பேராசிரியரையும் துரைமுருகனையும் சி.ஐ.டி. காலனி வீட்டிற்கு வரச்சொன்னார். 

ஸ்பெஷல் ஏர்கிராஃப்ட்டில் சென்னை வந்த குலாம்நபி ஆசாத், ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம் மூவரும் கலைஞரை சந்தித்தனர். கலைஞர் பக்கத்தில் பேராசிரியரும் துரைமுருகனும் இருந்தனர். கலைஞர் எடுத்த எடுப்பிலேயே, ""இனப்படுகொலை என்ற வார்த் தையை ஐ.நா.தீர்மானத்தில் சேர்ப்ப துடன் இந்திய பாராளுமன்றத் திலும் இதே வார்த்தைகளுடனும் நாங்கள் சொல்லும் திருத்தங் களுடனும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை  விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே பொய்யைச் சொல்லிச் சொல்லி என்னை ஏமாற்றிட்டீங்க. இப்பவும் அதைத் தான் சொல்றீங்க. அங்கே இனப்படுகொலை இன்னும் நடந்துக்கிட்டிருக்கு. நான் என் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். என் தொப்புள் கொடி உறவுகள் அழிந்துபோக விடமாட்டேன். இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றணும்'' என்று சொல்ல, வந்திருந்த மூவருக்கும் பலத்த ஷாக்.

ப.சிதம்பரம், “""நீங்கள் இந்தியாவிலேயே பெரிய தலைவர். உலகத் தமிழர்களின் தலைவர். உங்கள் வழிகாட்டுதல் வேண்டும் என்றுதான் சோனியா மேடம் எங்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார்''. என்று சொல்ல, "மத்திய அரசின் வார்த்தைகளை நான் இனி நம்பத் தயாராக இல்லை. தீர்மானத்தை நிறைவேற்றுங் கள்' என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார். உடனே ஏ.கே.ஆண்டனி, "தெற்கு சூடான் போலவோ கிழக்கு தைமூர் போலவோ இலங்கையில் தனிநாடு உருவாகும் சூழல் இல்லை' என்று சொல்ல, "பங்களாதேஷ் எப்படி உருவானது' என்று துரைமுருகன் கேட்க, காங்கிரஸ் தரப்பில் வந்திருந்த மூவரிட மும் பதில் இல்லை. 

காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு களால் பேராசிரியருக்கும் கடும் கோபம். அவர் கலைஞரிடம், "என்னங்க கலை ஞர், இவங்க பேச்சை நம்பவேண்டாம். நம் இயக்கத்துக்கும் அதன் வரலாற்றுக் கும் எந்த கெட்டபெயரும் வந்துடக் கூடாது. ஈழத்தமிழருக்காக ஆட்சியை இழந்தவர் நீங்க. உங்க முடிவுதான் சரி' என்று தமிழில் சொல்லியிருக்கிறார். 

கலைஞர்  தன்னுடைய நிலையில் உறுதியாக இருப்பதைப் புரிந்து கொண்ட அவர்கள் "பிரதமரிடமும் சோனியாவிடமும் உங்கள் கருத்தை தெரிவிக்கிறோம்' என்று சொல்லிவிட் டுக் கிளம்பினர். பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படவில்லை என்று தங்கள் பயணத்தின் தோல்வியை சூசகமாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் குலாம் நபி ஆசாத்.

இனப்படுகொலை என்ற தீர் மானத்தை இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும் என்ற அழுத்தத் தின் மூலம் ஈழப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு கலைஞர் நகர்த்துவது காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவருடைய கோரிக்கையை நிறைவேற்றுவது எந்தளவில் சாத்தியம் என காங்கிரஸ் மேலிடம் யோசிக்கிறதாம். இதனிடையே கனிமொழியும் தயாநிதியும் காங்கிரஸ் தரப்பிடம், "இலங்கை மீது சர்வதேச விசாரணை என்ற வார்த்தையைத் தீர்மானத்தில் திருத்தமாகக் கொண்டு வாருங்கள், நாங்கள் தலைவரை சமாதானப்படுத்துகிறோம்' என்று திங்கள் இரவில் சொல்லியிருக்கிறார்கள். இதுபற்றி காங்கிரஸ் ஆலோசிக்க மட்டும் செய்துள்ளது.

தீர்மானத்தில் உரிய திருத்தங்களுடன் இந்திய அரசின் நடவடிக்கைகள் உண்மையான அழுத்தம் கொடுப்பதாக அமையாவிட்டால் மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க விலகல், கூட் டணியிலிருந்து வெளியேறுவது என அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகிறார் கலைஞர்.                                

ad

ad