புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2013


சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும், ஆளும் பாஜக மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 7ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன
. இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிகையில் காங்கிரஸ் அமோக வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாகவும், 7 மாநகராட்சிகளை கைப்பற்றி உள்ளதாகவும் தெரிய வருகிறது.

அதன் படி காங்கிரஸ் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் மத சார்பற்ற ஜனதா தளமும், மூன்றாவது இடத்தில் ஆளும் பாஜகவும் உள்ளன. தற்போது புதிதாக கட்சித் தொடங்கி தேர்தல் களத்தில் குதித்துள்ள கர்நாடக ஜனதா நான்காவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad