புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2013


இத்தாலி வீரர்கள் இன்று இந்தியா திரும்பினர்

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் இரண்டு பேர், பரோலில் தங்க
ள் நாட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்களை திருப்பி அனுப்ப இத்தாலி அரசு மறுத்தது.
இதுதொடர்பாக இந்தியாவின் கண்டனம் மற்றும் உச்சநீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து வீரர்களை திருப்பி அனுப்ப சம்மதித்தது.

அத்துடன் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தியது.

மிகவும் அரிதான இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இத்தாலி வீரர்களுக்கு மரண தண்டனை பெற மாட்டார்கள் என்று இந்தியா உறுதி அளித்திருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி குர்ஷித் கூறினார்.

இதையடுத்து இத்தாலி அரசு, இரு வீரர்களையும் விமானப்படை விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. அவருடன் இத்தாலி வெளியுறவுத்துறை துணை மந்திரியும் வந்தார். அவர்கள் விமானம் இன்று மாலை டெல்லி வந்து சேர்ந்தது. அவர்களை போலீசார் பாதுகாப்புடன் இத்தாலி தூதரகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இத்தாலி வீரர்கள் அவர்கள் நாட்டிலேயே சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே வீரர்களை திருப்பி அனுப்பியதால் இத்தாலி அரசுக்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெளியுறவுத்துறை மந்திரி டெர்சி, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதனை டெர்சி நிராகரித்துள்

ad

ad