புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக வலியுறுத்திப் போராட்டங்களை நடத்திவருவதை இந்திய அரசு அலட்சியப்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசில் பங்கெடுத்துள்ள தி.மு.க.வின் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டமும், டெல்லி டெசோ  கருத்தரங்கமும் இந்திய அரசால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா  என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், உடல்நிலை குன்றியுள்ள நிலையிலும் தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர், கலைஞரை நேரில் சந்தித்து, "இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்தியாவின் நிலைப்பாடு மாறாவிட்டால் நாம் ஒரு முடிவெடுத்தாக வேண்டியதுதான்' என்று வலியுறுத்தியுள்ளார். அதை கவனமாகக் கேட்ட கலைஞர் அதன்பின் தென்சென்னை மா.செ. ஜெ.அன்பழகனிடம் முற்றுகைப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தச் சொன்னார். தி.மு.க.வுடன் விடுதலைசிறுத்தைகள் கட்சியினரும் தி.க.வினரும் இணைய, பாலச்சந்திரன் படம் போட்ட பதாகைகளுடன் அணிதிரளவேண்டும் என்ற உத்தரவு, போராட்டத்திற்கு முதல்நாளே கட்சியினருக்கு இடப்பட்டது. டெசோ கருத்தரங்கிலும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், அதன்பிறகும் இந்தியாவின் நிலைமாறாவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து  தி.மு.க வெளியேறுவது என்றும் ஆலோசனையில் முடிவாகியுள்ளதாம்.

ad

ad